நேபாளத்தில் திகார் என அழைக்கப்படும் தீபாவளிக் கொண்டாட்டம், காத்மாண்டுவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2021 அக்டோபர் 27ஆந் திகதி கொண்டாடப்பட்டது.
நேபாளத்தில் 2021 நவம்பர் 04ஆந் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் தீபாவளிக் கொண்டாட்டங்கள், செல்வத்தின் தெய்வமான லட்சுமியை வழிபடுவதற்கும், மரணத்தின் கடவுளான யமாவை வணங்குவதற்குமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
தூதரக வளாகம் வண்ணமயமான ரங்கோலி வடிவமைப்புக்கள், பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பண்டித் ஹேம் ஷர்மா அவர்களால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களை வேண்டி நாடத்தப்பட்ட விஷேட பூஜையுடன் நிகழ்வு தொடங்கியது. இலங்கை மற்றும் நேபாளத்தில் திருவிழாவைக் கொண்டாடுவதற்கான தனித்துவமான கலாச்சார விதிமுறைகளை பங்கேற்பாளர்களுடன் தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் பகிர்ந்து கொண்டனர்.
நேபாளி ஊழியர்கள் வழக்கமாக திகார்ஃதீபாவளியின் போது இசைக்கப்படும் பாரம்பரிய நேபாளிப் பாடல்களுடன் பங்கேற்பாளர்கள் மகிழ்விக்கப்பட்டார்கள். பங்கேற்பாளர்களுக்கு பாரம்பரிய இனிப்புக்கள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கபட்டு, விழா நிறைவுற்றது. இந்நிகழ்வில் காத்மாண்டுவில் வசிக்கும் இலங்கையர்கள், தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
காத்மாண்டு
2021 அக்டோபர் 29