கனேடிய நடாளுமன்ற பொதுச் சபையின் பிரேரணைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது

கனேடிய நடாளுமன்ற பொதுச் சபையின் பிரேரணைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை பதிவு செய்தது

2022 மே 18ஆந் திகதி கனேடிய நாடாளுமன்றத்தில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுதியான எதிர்ப்பையும்  ஆழ்ந்த கவலையையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதிவு செய்தார்.

2022 மே 20, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இலங்கைக்கான கனடாவின்  பதில் உயர் ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானுடனான சந்திப்பில், பிரேரணையின் அப்பட்டமான பொய்யான உள்ளடக்கத்தை திட்டவட்டமாக நிராகரித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், 'இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கண்டறியப்படவில்லை' என்ற கனடா அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு அதன் தவறான பொருள் அடிப்படையில் முரண்படுவதாகக் குறிப்பிட்டார். குறிப்பிட்ட சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழில்நுட்பச் சொற்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், அத்துடன் கனேடிய அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எவரேனும் ஒப்புதலளிப்பதாகத் தோன்றும் ஆபத்துகளையும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இந்த பிரேரணையின் தவறான மற்றும் பாரபட்சமான தன்மை மற்றும் இத்தகைய நடத்தையின் விளைவாக பொது  களத்தில் உருவாகியுள்ள இலங்கை மீதான எதிர்மறையான கருத்துக்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரேரணையில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கேட்டுக்கொண்டார். இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வரும் வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, பதில் உயர்ஸ்தானிகர் ஸ்ட்ரோஹான், கனடாவின் நடாளுமன்ற பொதுச் சபையில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர்களின் பிரேரணையின் கட்டுப்பாடற்ற, சட்டமியற்றும் தன்மையைக் குறிப்பிட்டார். தகுந்த நடவடிக்கைக்காக, அரசியல் முன்முயற்சியின் உள்ளடக்கத்தை கனடாவின் வெளியுறவு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தித் திணைக்களத்திற்கு தெரிவிக்கவும் அவர் ஒப்புக்கொண்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மே 20

Please follow and like us:

Close