2021 நவம்பர் 15ஆந் திகதி கிங்டாவோவிற்கு விஜயம் செய்த தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன, கிங்டாவோவிற்கும் கண்டிக்கும் இடையே இரு நகரங்களுக்கிடையிலான நட்பு மற்றும் கூட்டுறவுகளை ஏற்படுத்துவது தொடர்பான கடிதத்தில் கைச்சத்திட்டார். வீடியோ இணைப்பு மூலம் கையொப்பங்கள் இடப்பட்டன. கிங்டாவோவுக்கான மேயர் சாவோ ஹாவோ ஜிபின் மற்றும் கண்டிக்கான மேயர் கேசர சேனநாயக்க ஆகியோர் கைச்சத்திட்டனர்.
முன்னதாக, தூதுவர் கொஹொன மற்றும் அவரது தூதுக்குழுவை அன்புடன் வரவேற்ற கிங்டாவோவின் மேயர் ஜாவோ, கிங்டாவோ பற்றிய பொதுவான விளக்கத்தை வழங்கினார். மேயர் ஜாவோ குறிப்பிடுகையில், 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரை, கிங்டாவோவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1% அதிகரித்துள்ளதுடன், இந்த ஆண்டு மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு 800 பில்லியன் யுவான் தொகையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். கிங்டாவோவில், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணு தகவல் அமைப்புக்கள் முன்னணி தொழில்களாக உள்ளன. மக்லேவ் ரயில் கிங்டாவோவில் நிர்மாணிக்கப்பட்டது. உயர்தர இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் கடல்சார் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் மிகவும் திருப்திகரமாக இருந்தது.
பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார சுற்றுலாத் துறைகளில் இலங்கையுடன் பரிமாற்றங்களை வலுப்படுத்துவதற்கு கிங்டாவோ எதிர்பார்க்கின்றது. 2020ஆம் ஆண்டில், கிங்டாவோவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக அளவு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இரு தரப்பும் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தூதுவர் கலாநிதி பாலித்த கொஹொன, இலங்கை மற்றும் குறிப்பாக கண்டி நகரங்களை மேயர் சாவோவிடம் அறிமுகப்படுத்தியதுடன், எதிர்காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மேம்பட்ட பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் உறவுகள் மேலும் வலுவடையும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் சி.பி.சி. கிங்டாவோவின் மாநகரக் குழுவின் பிரதிச் செயலாளர் மாண்புமிகு குய் ஜென்ஹாங், இலங்கைக்கான சீனத் தூதுவர், கண்டி மேயர் கேசர டி. சேனநாயக்க ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாநகரக் கட்சிக் குழுவின் நிலையியற் குழு உறுப்பினரும், துணை மேயருமான சூ கிங்குவோ தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தூதுவர் கொஹொன, கடந்த 70 வருடங்களாக இலங்கையும் சீனாவும் பல்வேறு துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்பை பேணி வருவதாகவும், இரு நாடுகளும் பலதரப்பு அரங்குகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். பரஸ்பர நன்மைகள் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை அடைய அவர்கள் நெருக்கமான மற்றும் நட்புறவுகளை வளர்த்து, கண்டி மற்றும் கிங்டாவோ இடையே பாலமாக அவர் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார். கிங்டாவோவின் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த கல்வி வசதிகள் ஆகியவற்றிலிருந்து கண்டி பயனடையலாம் எனக் குறிப்பிட்டார்.
1957ஆம் ஆண்டு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து மேற்கொள்ளப்பட்ட 13வது நட்பு நகர உடன்படிக்கைகள் கிங்டாவோ மற்றும் கண்டி ஆகும் என தூதுவர் குய் ஜென்ஹாங குறிப்பிட்டார். இவை மக்களிடையே புரிந்துணர்வையும் நட்பையும் மேலும் ஊக்குவித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உள்ளூர் பரிமாற்றங்களின் வரலாற்றில் வண்ணமயமான தொகுப்பை ஏற்படுத்தும். கிங்டாவோவில் சர்வதேச ஒத்துழைப்பிற்கான ஒரு வழி - ஒரு பாதை மற்றும் புதிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விளக்கப் பகுதி (ஸ்கோடா தளம்) பலப்படுத்தப்பட்டு வருவதாக மேயர் ஸாவோ ஹாயோஸி குறிப்பிட்டார். பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் பரிமாற்றங்களை மேம்படுத்த இரு தரப்பினரும் ஸ்கோடா தளத்தை முழுமையாகப் பயன்படுத்துவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். கண்டி நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்துவதற்கும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் ஸ்கோடாவை பயன்படுத்துவதை அவர் உற்சாகமாக வரவேற்றார். கண்டியில் கூட்டுறவுத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு அவர் கிங்டாவோ நிறுவனங்களை ஊக்குவிப்பார். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான கண்டி மற்றும் கிங்டாவோ இடையேயான நட்பு நகர ஒப்பந்தத்தின் முடிவு பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என மேயர் சேனாநாயக்க தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகம்,
பெய்ஜிங்
2021 நவம்பர் 17