கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து, இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.
உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுவதிலும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதிலும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 செப்டம்பர் 10
Please follow and like us:


