ஓமான் சுல்தானேற்றின் வெளிச்செல்லும் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்  பீரிஸூடன் சந்திப்பு

ஓமான் சுல்தானேற்றின் வெளிச்செல்லும் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்  பீரிஸூடன் சந்திப்பு

ஓமான் சுல்தானேற்றின் தூதுவர் ஜுமா ஹம்தான் ஹசன் அல் ஷெஹி 2022 ஜூலை 07 ஆந் திகதி வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.

இச்சந்திப்பில், விஷேடமாக பொருளாதார ஒத்துழைப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை  வலுப்படுத்தியமை மற்றும் பலதரப்பு மன்றங்களில் வழங்கப்பட்ட ஆதரவு ஆகியவற்றுக்கான வெளிச்செல்லும் தூதுவரின் சிறந்த முயற்சிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராட்டினார்.

ஓமானிய தூதுவர் ஜும்மா ஹம்தான் ஹசன் அல் ஷெஹி, தான் இலங்கையில் பணியாற்றிய காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தனக்கு வழங்கிய ஆதரவிற்காக நன்றிகளைத்  தெரிவித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூலை 10

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close