ஓமானுக்கான இலங்கைத் தூதரகத்தின் “தூதுவருடன் பேசுங்கள்” சமூகத் தொடர்பாடல் நிகழ்ச்சி இம்மாதம் ஆரம்பம்

 ஓமானுக்கான இலங்கைத் தூதரகத்தின் “தூதுவருடன் பேசுங்கள்” சமூகத் தொடர்பாடல் நிகழ்ச்சி இம்மாதம் ஆரம்பம்

ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் “தூதுவருடன் பேசுங்கள்” என்ற சமூகத் தொடர்பாடல் நிகழ்வொன்றை  ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக்கிழமை 9.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை நடாத்தவுள்ளது. இந்த நிகழ்வின் நோக்கம் ஓமானில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை கலந்தாலோசிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகும்.

பின்வரும் கட்டணம் செலுத்தப்படாத தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி ஓமானுக்கான இலங்கைத் தூதுவருடன் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக்கிழமைகளிலும் நேரடியாகத் தொடர்பு  கொள்ள முடியும்:

80007877

“தூதுவருடன் பேசுங்கள்” முதலாவது நிகழ்வு இம்மாதம் 25ம் திகதி 9.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறும்  என்பதை இத்தால் அறியத் தருகின்றோம்.

இலங்கைத் தூதரகம்,

மஸ்கட்

2021 நவம்பர் 03

Please follow and like us:

Close