ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ஓமான் சுல்தானேற்றின் விவசாயம், மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சர் கலாநிதி சௌத் ஹமூத் அஹமட் அல் ஹப்சியைச் சந்தித்து, விவசாய மற்றும் மீன்பிடி ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பிற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். உணவுப் பாதுகாப்பு, தென்னை வளர்ச்சியில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மீன்பிடிப் படகு கட்டுவதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட மீன்பிடித் துறை உள்ளிட்ட விவசாயத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான குறிப்பிட்ட பகுதிகள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர். நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் இரு நாடுகளினதும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கிடையில் இணைப்புக்களை ஏற்படுத்துதல் போன்ற நோக்கத்துடன் விவசாயத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஓமானின் விவசாய, மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சின் பிரதிச் செயலாளர், சர்வதேச ஒத்துழைப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ரஹ்மா என். அல் ஹஜ்ரி, அமைச்சின் ஏனைய அதிகாரிகள் மற்றும் ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் திருமதி. திலினி அபேசேகர ஆகியோர் இந்த சந்திப்பின் போது கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
மஸ்கட்
2022 ஜனவரி 31