ஒஸ்ட்ரிய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதியை  நன்கொடை

ஒஸ்ட்ரிய அரசாங்கம் இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதியை  நன்கொடை

நான்கு மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான அவசர அத்தியாவசிய மருந்துகளின் தொகுதியை ஒஸ்ட்ரிய அரசாங்கம் 2022 ஆகஸ்ட் 16ஆந் திகதி இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

27 அத்தியாவசிய மருந்துகளை உள்ளடக்கிய இந்த சரக்கு, புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஒஸ்ட்ரியத் தூதரகத்தின் பொறுப்பாளர் மத்தியாஸ் ராடோஸ்ட்டிக்ஸால் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுடெல்லியில் உள்ள ஒஸ்ட்ரியத் தூதரகம் இலங்கைக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

இலங்கையில் அவசரமாகத் தேவைப்படும் மருந்துகளுக்காக இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சரக்கை ஏற்றுக்கொண்ட உயர்ஸ்தானிகர் மொரகொட, ஒஸ்ட்ரிய அரசாங்கத்தின் இந்த நட்புறவு மற்றும் நல்லெண்ணச் சைகைக்காக ஒஸ்ட்ரியத் தூதரகத்தின் பொறுப்பாளருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த மருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற 94 வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான முக்கிய ஒருங்கிணைப்புப் புள்ளியாக புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் செயற்படுகின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடெல்லி

2022 ஆகஸ்ட் 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close