முதலாவது ஒஸ்ட்ரிய நாட்டவரின் திருப்பதவியளிப்பு நியமனம் ஒஸ்ட்ரியாவில் 2022 மார்ச் 06ஆந் திகதி ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்மா சென்ட்ரம் நயனபோனிகாவில் நடைபெற்றது.
ஒஸ்ட்ரியாவில் உள்ள தம்ம சென்ட்ரம் நயனபோனிகாவின் நிறுவனர் மற்றும் தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய கலாநிதி விஜயராஜபுர சீலவன்ச தேரர் ஒஸ்ட்ரியப் பிரஜையான மார்க்கஸ் பாஸ்டோல்னிக்கை ஒஸ்ட்ரியாவின் வணக்கத்திற்குரிய சுசீல தேரராக திருப்பதவியளித்தார். இத்தாலி, பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகா சங்கத்தினர் துறவு மரபு வழிபாட்டை நடாத்தினர்.
தூதுவர் மற்றும் தூதரக ஊழியர்கள், திரு. பஸ்டோல்னிக்கின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இலங்கைச் சமூகத்தினர் மற்றும் ஒஸ்ட்ரிய பக்தர்கள் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.
கடந்த 40 வருடங்களாக பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்கு அதி வணக்கத்திற்குரிய கலாநிதி விஜயராஜபுர சீலவன்ச தேரரின் பெறுமதிமிக்க பங்களிப்பைப் பாராட்டிய தூதுவர் மஜிந்த ஜயசிங்க, ஒஸ்ட்ரியாவில் முதன்முறையாக பழமையான புனிதத்துவ திருப்பதவியளிப்பு வைபவத்தை நடாத்துவது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியமாக நெருக்கமான மற்றும் நட்புறவுமிக்க விஷேட உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
விழாவைத் தொடர்ந்து மகா சங்கத்தினருக்கு ஹீல் தானம் வழங்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
வியன்னா
2022 மார்ச் 15