ஐரோப்பிய சபையின் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துதல் தொடர்பான சைபர் குற்றம் தொடர்பான சாசனத்தின் இரண்டாவது மேலதிக உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து

 ஐரோப்பிய சபையின் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை வெளிப்படுத்துதல் தொடர்பான சைபர் குற்றம் தொடர்பான சாசனத்தின் இரண்டாவது மேலதிக உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து

ஐரோப்பிய சபையின் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை  வெளிப்படுத்துதல் தொடர்பான சைபர் குற்றம் தொடர்பான சாசனத்திற்கான இரண்டாவது மேலதிக உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய சபையில் வைத்து தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம் 2022 நவம்பர் 30ஆந் திகதி, ஐரோப்பிய சiயின் துணை பொதுச்செயலாளரும், உபசரணைத் தலைவரும், ஒப்பந்த அலுவலகத்தின் தலைவருமான திரு. ஜோர்ன் பெர்ஜ் மற்றும் டி-சி.வை. இன் 27வது முழுமையான கூட்டத்திற்கான பிரதிநிதிகளின் முன்னிலையில் கைச்சாத்திட்டார். டி-சி.வை. இன் இலங்கைப் பிரதிநிதியும், இலங்கை சி.இ.ஆர்.டி. இன் பணிப்பாளரும், இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவரமைப்பின் பொது ஆலோசகருமான ஜயந்த பெர்னாண்டோவும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.

மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் இலத்திரனியல் ஆதாரங்களை வெளிப்படுத்துதல்  தொடர்பான சைபர் குற்றம் தொடர்பான சாசனத்தின் இரண்டாவது மேலதிக உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடுவதை பரிந்துரைக்கும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சு ஆகியன சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை 2022 நவம்பர் 29ஆந் திகதி அங்கீகாரமளித்தது. சைபர் குற்றம் தொடர்பான விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகளுக்காக வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து இலத்திரனியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இலங்கைக்கு இது உதவுகின்றது. உலகளாவிய சைபர் குற்றவியல் சவால்களுக்கு மிகவும் பயனுள்ள பதில்களை வழங்கும் தரவுப் பாதுகாப்பில் மேலதிக விதிகளுடன் புதிய மனித உரிமைகள் பாதுகாப்புக்களும் இதில் அடங்கும்.

2015ஆம் ஆண்டில் புடாபெஸ்ட் சைபர் குற்றம் தொடர்பான உடன்படிக்கையில் இணைந்த முதலாவது தெற்காசிய நாடும், மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மின்னணு ஆதாரங்களை  வெளிப்படுத்துதல் தொடர்பான புடாபெஸ்ட் சைபர் குற்ற உடன்படிக்கைக்கான இரண்டாவது மேலதிக உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட முதலாவது நாடு இலங்கை ஆகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் ஆசிர்வதம், இலங்கையின் தரவுப் பாதுகாப்புச் சட்ட  விதிகள் 2வது மேலதிக உடன்படிக்கைக்கு இணங்குவதை சுட்டிக்காட்டி, 'புடாபெஸ்ட் உடன்படிக்கைக்கான 2வது மேலதிக உடன்படிக்கையின் பேச்சுவார்த்தையின் போது கற்றுக்கொண்ட பாடங்கள், 2022 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க சட்டத்தின் மூலம் தெற்காசியாவில் முதலாவது தரவுப் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி, செயற்படுத்துவதற்கு இலங்கை நிபுணர்களுக்கு உதவியது' எனக் குறிப்பிட்டார். ஐரோப்பிய சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், சைபர் குற்றங்களுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் திறன் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் ஐரோப்பிய சபை இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டிய அதே வேளை, சாசனத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சைபர் குற்றம் தொடர்பான சாசனத்தில் ஐரோப்பிய சபை மற்றும் அரச தரப்புக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கைத் தூதரகம்,

பிரஸ்ஸல்ஸ்

2022 டிசம்பர் 06

Please follow and like us:

Close