ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தினது 'ப்ரென்ட்ஸ் ஒப் சிறிலங்கா' குழுவின் உறுப்பினர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தினது ‘ப்ரென்ட்ஸ் ஒப் சிறிலங்கா’ குழுவின் உறுப்பினர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினது 'ப்ரென்ட்ஸ் ஒப் சிறிலங்கா'  குழுவின் உறுப்பினர்களான  ஜெப்ரி வான் ஓடன், ஐ.ஒ.பா.உ  மற்றும் வில்லியம் டாட்மௌத் (பிரபு) ஐ.ஒ.பா.உ ஆகியோர் 2019 ஜனவரி 2-6 வரை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டனர்.

அவர்களது 5 நாள் விஜயத்தின் போது,  அரசாங்கம், எதிர்க்கட்சி, அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள்  மற்றும்  ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். இந்தக் கூட்டங்கள்  ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டுறவு சம்பந்தமான ஜி எஸ் பி பிலஸ், பிராந்திய பிரச்சினைகள், ஆட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சி, சிவில் சமூக பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள்  நன்மையளிக்கும் பொதுவான பிரச்சினைகள் பற்றிய பல துறைகளை கலந்துரையாடும் மன்றமொன்றுக்கு வழியமைத்தது.

கொழும்பில், அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன, நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவீர ஆகியோரை சந்தித்ததுடன் அங்கு அன்மையில் இடம்பெற்ற அரசியல் முன்னேற்றம், அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அபிவிருத்திக்கான ஜி எஸ் பி பிலஸின் உச்சபயனை பெற்றுக்கொள்வதற்கான இலங்கையின் தேவைப்பாடு ஆகியவை தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஜனநாயகத்தை மேலும் கட்டியெழுப்புவதற்கு, குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்தவும் இலங்கையில் அவர்களின் ஈடுபாட்டை மேற்கொள்வதற்கான பகுதியாகவுள்ள ஜனநாயக நிறுவனங்களை வலுவூட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகளால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் பாராட்டினர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோரையும் சந்தித்திருந்தனர்.

பாதுகாப்பு படையின் வன்னிக்கான தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா இராணுவத்தினால் உதவியளிக்கப்பட்ட மீள்குடியமர்த்தல் செயற்பாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறியதுடன், அதற்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்தனர். வவுனியாவின் மாவட்ட செயலாளரையும் அவர்கள் சந்தித்ததுடன், வவுனியாவின் சிதம்பிராபுரத்திலுள்ள மீள்குடியமர்த்தப்பட்ட கிராமத்திற்கும் விஜயம் செய்து, நல்லிணக்க செயற்பாடுகளின் நடைமுறைகள் தொடர்பில் அங்கு வசிப்பவர்களுடன் திறந்த கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

ஜி.எஸ்.பி.பிலஸின் நன்மைகளை அடைந்து கொள்வதற்காக தொழில் சந்ததி, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு பங்களிப்புச் செய்வதற்கு மாஸினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையான ஆடை உற்பத்தி கலை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்வதற்காக, அவர்கள் துல்ஹிரியவிலுள்ள மாஸ் பெப்ரிக் பார்க்கிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்வதற்கும் ஏற்பாடொன்று செய்யப்பட்டிருந்தது. சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி. கணேஷன் விக்னராஜா,  பிராந்தியத்தில் புவி அரசியல் அபிவிருத்திகள் மற்றும் பாரிய சர்வதேச பங்குதாரர்களுடனான இலங்கையின் உறவுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஊடாடு அமர்வொன்றில் ஈடுபட்டார்.

2006ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் 'ப்ரென்ட்ஸ் ஒப் சிறிலங்கா'  குழு ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளின் நடைமுறைகள் இலங்கைக்கு கிடைப்பதனை பூரணப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை உறவுகளை மேம்படுத்துவதில் அது ஈடுபட்டு வருகின்றது. இந்த குழு ஆரம்பிக்கப்பட்டது முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வென் ஓரடன் அதன் தலைவராக கடமையாற்றி வருகின்றார். டார்த்மவுத் பிரபு இந்தக் குழுவில் 2012ஆம் ஆண்டில் இணைந்து கொண்டார்.

'ப்ரென்ட்ஸ் ஒப் சிறிலங்கா' குழு இறுதியாக 2016 பெப்ரவரியில் இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2019 ஜனவரி 09

 

Please follow and like us:

Close