ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழு 2025, ஏப்ரல் 28 முதல் மே 07 வரையில் மேற்கொள்ளவுள்ள இலங்கைக்கான வருகை

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்புக் குழு 2025, ஏப்ரல் 28 முதல் மே 07 வரையில் மேற்கொள்ளவுள்ள இலங்கைக்கான வருகை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முன்னுரிமைத் திட்டம் + (GSP+) வர்த்தக முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் 27 சர்வதேச மரபுகளைச் செயற்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவானது, 2025 ஏப்ரல் 28 முதல் மே 07 வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இலங்கையானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதிகள் அமெரிக்க டொலர்களில் 3 பில்லியன் பெறுமதியைக் கொண்டுள்ளதுடன், இது, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதித் தளமாக விளங்குகிறது.

இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட 27 மாநாடுகளானவை, மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி ஆகிய துறைகளை உள்ளடக்குகிறது. இம்மாநாடுகளின் அமுலாக்கலானது, அவ்வப்போது பணிகள் மற்றும் அறிக்கைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

இப்பணிக்குழுவானது, அரசு அதிகாரிகள், தொடர்புடைய நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூகம், வணிக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சந்திக்கவுள்ள அதேவேளை, களப் பயணங்களையும் மேற்கொள்ளவுள்ளது.

இறுதியாக,  GSP+ கண்காணிப்புப் பணி கொழும்பில் இடம்பெற்றிருந்தது.

வெளிநட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 26 ஏப்ரல் 2025

Please follow and like us:

Close