ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன்  சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் பிராந்தியப் பணிப்பாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன்  சந்திப்பு

தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஒத்துழைப்பு அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார், 2022 ஆகஸ்ட் 17ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

குறிப்பாக இக்கட்டான காலகட்டத்திலான ஐ.நா. வின் நல்லெண்ணம், ஆதரவு மற்றும் புரிந்துணர்வை பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, ஐ.நா. வுடனான தனது பங்காளித்துவத்தை இலங்கை மதிப்பதாகக் குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் ஐ.நா. அமைப்பின் பணிகளுக்கு வழிகாட்டும் ஐ.நா. வின் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்புக் கட்டமைப்பு  2023 – 2027 நேற்று (17/08) அறிமுகப்படுத்தப்பட்டதை அமைச்சர் வரவேற்றார். நிதியமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் பங்காளித்துவத்துடன் ஒத்துழைப்புக் கட்டமைப்பானது இறுதி செய்யப்பட்டதுடன், இது 'யாரையும் விடுவதில்லை' என்ற கோட்பாட்டின் அடிப்படையிலானது.

நாட்டின் இலவச சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைமையின் காரணமாக, இலங்கையானது பிராந்திய சராசரியை விடவும் அதிகமான மனித அபிவிருத்திச் சுட்டெண் மதிப்பை எட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். மக்களுக்கு சுகாதாரம் மற்றும் கல்வியை வழங்குவதில் இலங்கை முன்னோடியாக இருப்பதாகவும், பாதிப்புக்குள்ளான குழுக்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினால் இத்தகைய அமைப்புக்களை அதிகரிப்பதே ஒத்துழைப்புக்  கட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் பிராந்திய பணிப்பாளர் தெரிவித்தார். இலங்கையுடன் நெருக்கமான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் ஐக்கிய  நாடுகள் சபை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஆகஸ்ட் 19

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close