ஊடக அறிக்கை- இலங்கைத் தூதரகம் பீஜிங், 2021 மார்ச் 13

ஊடக அறிக்கை- இலங்கைத் தூதரகம் பீஜிங், 2021 மார்ச் 13

சீனாவில் தயாரிக்கப்பட்ட 'வழுக்காத கால் மிதித் துடைப்பான்' இல் இலங்கையின் தேசியக் கொடியின் படத்தை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

தகவல் கிடைத்த உடனேயே, அது குறித்த தகவல்களை சீன வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கி, இலங்கையின் தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்தி கால் மிதித் துடைப்பான்கள் மற்றும் இதர பொருட்கள் தயாரிக்கப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் கோரிக்கை விடுத்தது. இலங்கையின் தேசியக் கொடியை தவறாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கால் மிதித் துடைப்பான்கள் மற்றும் இதுபோன்ற எந்தவொரு பொருட்களையும் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு, அமேசனில் இந்தத் தயாரிப்புக்களை சந்தைப்படுத்திய நிறுவனத்திற்கு தூதரகத்தின் கடிதம் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. விளம்பரம் தற்போது அமேசனிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், இலங்கையின் தேசியக் கொடியுடன் கூடிய எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்காக சீனாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

இலங்கைத் தூதரகம்
பீஜிங்

2021 மார்ச் 13

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close