இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து இலங்கை கவலை

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து இலங்கை கவலை

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை நடவடிக்கைகள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையடைகின்றது.

நிலைமை குறித்த இலங்கையின் ஆழ்ந்த அக்கறை மற்றும் பலஸ்தீன மக்களின் உரிமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் ஆர்வம் குறித்து இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவரிடம் வெளிநாட்டு அமைச்சர் ஏற்கனவே மூன்று நாட்களுக்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்தார்.

மோதலை நிறுத்தி அமைதியை மீட்டெடுக்குமாறும், பரந்த பிராந்தியத்தில்  ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியான முன்னேற்றங்களிலிருந்து எழக்கூடிய அபாயத்தைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மே 17

Please follow and like us:

Close