இஸ்கொன் கோயிலுடன் இணைந்து மும்பையில் உள்ள துணைத் தூதரகம் கறுவாப்பட்டையை ஊக்குவிப்பு

 இஸ்கொன் கோயிலுடன் இணைந்து மும்பையில் உள்ள துணைத் தூதரகம் கறுவாப்பட்டையை ஊக்குவிப்பு

இலங்கை கறுவாப்பட்டை ஊக்குவிப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்து, மும்பை ஜூஹூவில் உள்ள கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தில் (இஸ்கொன்) 2022 மே 16ஆந் திகதி கோயிலின் தலைவர் பிரஜாரி தாஸ் மற்றும் ஏனைய வதிவிடத் துறவிகளின் முன்னிலையில், கிருஷ்ணருக்கு 5 கிலோ கறுவாப்பட்டையை வழங்க மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது.

வைபவத்தின் போது துணைத் தூதுவர் கலாநிதி வல்சன் வேத்தோடி, உலக கறுவாவில் 90மூ இலங்கையினால் விநியோகிக்கப்படுவதுடன், உலகிலேயே அதிகளவு தூய இலவங்கப்பட்டை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை விளங்குவதாகத் தெரிவித்தார். 'தூய இலங்கைக் கறுவா' என்பது சர்வதேச சந்தையில் உலகளாவிய வர்த்தக நாமமாக அமைவதுடன், இலங்கை கறுவாவுக்கான ஜி.ஐ. சான்றிதழை ஐரோப்பிய ஒன்றியத்தில் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் பூர்வீக மரமான சின்னமொமம் செய்லானிகம், உயர்தர தூய கறுவாவை உற்பத்தி செய்கின்றது என சுட்டிக்காட்டிய துணைத் தூதுவர், இலங்கையில் விளைவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் கறுவா அதன் தனித்துவமான தரம், நிறம், சுவை மற்றும் வாசனை ஆகியவற்றின் காரணமாக சர்வதேச சந்தையில் நீண்டகால நற்பெயரைப் பெறுகின்றது எனக் குறிப்பிட்டார்.

இந்திய உணவு வகைகளில் கறுவா இன்றியமையாத சுவையூட்டிப் பொருளாக இருந்த போதிலும், உண்மையான கறுவாவிற்கும் காசியாவிற்கும் உள்ள வித்தியாசம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், மும்பையில் இலங்கை கறுவா கிடைக்காததாலும், மும்பை சந்தையில் உள்ள பெரும்பாலான நுகர்வோர் காசியா வகைகளை கொள்வனவு செய்வதுடன், இலங்கையில் இருந்து கறுவா உற்பத்திகளுக்கான தேவையை உருவாக்குவதற்காக தற்போதைய சூழ்நிலையை மாற்றுவதற்கு துணைத் தூதரகத்தின் கறுவா ஊக்குவிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக துணைத் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

மும்பை

2022 மே 20

Please follow and like us:

Close