இலண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி சிறிசேன அவர்கள் நிலைபேறான அபிவிருத்திக்கான இலங்கையின் நீல - பசுமை பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்தை சிறப்பித்துக்கூறினார்

இலண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி சிறிசேன அவர்கள் நிலைபேறான அபிவிருத்திக்கான இலங்கையின் நீல – பசுமை பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்தை சிறப்பித்துக்கூறினார்

CHOGM
 2018 ஏப்ரல் 16 தொடக்கம் 21 ஆந் திகதி வரை இலண்டன் நகரில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் இலங்கை சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டதுடன், அதனுடன் தொடர்புடைய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளிலும் பங்குபற்றினார். முறையான பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களின் முன்-சந்திப்புகள், அரச தலைவர்கள் மற்றும் தலைவர்களின் பின்னடைவு குறித்த சந்திப்புகள் ஆகியன உள்ளடக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி சிறிசேன அவர்களுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் இணைந்து கொண்டிருந்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி சிறிசேன அவர்கள், சமச்சீரான உள்ளக பசுமை வளர்ச்சியை எய்துவதனூடாக நிலைபேறான அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கான இலங்கையின் மூலோபாயம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். இந்த பட்டயத்தில் பிரதிபலிக்கும் பொதுநலவாயத்தின் அடிப்படை அரசியல் விழுமியங்கள் தொடர்பான தமது உறுதிப்பாட்டினை உறுதிப்படுத்தல் மற்றும் பால்நிலை சமத்துவம் மற்றும் உள்ளார்ந்தம், ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தல் மற்றும் சமாதானத்தை மேம்படுத்தல், பல்தரப்பு வர்த்தக முறைமையை உறுதிப்படுத்தல், முதலீடுகளை விஸ்தரித்தல் மற்றும் உள்ளக பொதுநலவாய வர்த்தகத்தை மேம்படுத்தல், உள்ளார்ந்த மேம்படுத்தல் மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி, எளிதில் பாதிப்படையும் தன்மை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காணல், சமுத்திரங்களின் நிலையான அபிவிருத்தி, சக்தி மற்றும் இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு, சுகாதாரம், கல்வி மற்றும் இணையவெளி பாதுகாப்பு, வன்முறை தீவிரவாதம், மனித ஆட்கடத்தல் மற்றும் சிறுவர் சுரண்டல் மற்றும் பாரதூரமான மற்றும் நாடுகடந்த குற்றங்களை தடுத்தல் போன்ற முக்கிய பிரிவுகள் தொடர்பான உறுதிமொழி செயற்திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுநலவாய நாடுகளின் "பொதுவான எதிர்காலத்தை நோக்கி" என்பதை ஏற்று பின்பற்றுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பில் ஜனாதிபதி இணைந்து கொண்டிருந்தார்.

காலநிலை மாற்றம், மாசடைதல், மிதமிஞ்சிய மீன்பிடி போன்ற விளைவுகளிலிருந்து சமுத்திரத்தை பாதுகாப்பதற்கான உறுதியான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட உந்துதலை ஏற்றுக்கொண்டு பொதுநலவாய நீல பட்டயத்தையும் தலைவர்கள் பின்பற்றினர். இவ்விடயம் தொடர்பில் சதுப்பு நில மீள் உருவாக்கத்திற்கான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கு இலங்கை உறுதியளித்ததுடன், இதற்கிணையாக நீல பொருளாதார வளர்ச்சி, பவளப் பாறைகள் மீள்உருவாக்கம், மனிதர்களினால் உருவாக்கப்படும் CO2 உமிழ்வு வெளியேற்றத்தினால் ஏற்படும் சமுத்திர அமிலமாகுதல் தொடர்பான செயற்பாடு போன்ற சமுத்திரத்துடன் தொடர்புடைய ஏனைய பிரிவுகளை பாதுகாப்பதற்கு ஏனைய நாடுகள் உறுதியளித்திருந்தன. மேலும் பிளாஸ்டிக்குகள் அற்ற சமுத்திரங்களை உருவாக்கும் வகையில் ஐக்கிய இராச்சியம் மற்றும் வனொட்டுவினால் தலைமை தாங்கப்படும் சுத்தமான சமுத்திரங்கள் கூட்டணி இற்கு ஆதரவளிப்பதாகவும் இலங்கை உறுதியளித்தது.

பொதுநலவாய அரச தலைவர்களினால் பின்பற்றப்பட்ட மற்றுமொரு முக்கியமான ஆவணம் யாதெனில், பொதுநலவாய விழுமியங்களைப் பிரதிபலிக்கக்கூடியதும், திறந்த, ஜனநாயக, அமைதியான மற்றும் பாதுகாப்பான இணையம், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் போன்றவற்றை அமைக்கும் பொதுநலவாய இணையவெளி பிரகடனம் ஆகும். இந்த பிரகடனத்தின் மூலம் தேசிய இணையவெளி பாதுகாப்பு மூலோபாயங்களை பலப்படுத்தல் அல்லது அபிவிருத்தி செய்தல் மற்றும் செயற்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தல் ஆகிய நோக்குடன் 2020 ஆம் ஆண்டளவில் பொதுநலவாயம் முழுவதும் ஒத்துழைப்பை அதிகரித்தல் மற்றும் தேசிய இணையவெளி அபாய மதிப்பீடுகளை முன்னெடுத்தல் ஆகியவை தொடர்பில் இந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டளவில் 2 ட்ரில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் வரை முதலீடுகளை விஸ்தரித்தல் மற்றும் உள்ளக பொதுநலவாய செயற்பாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் குறிக்கோளுடன், திறன் கட்டியெழுப்பல் மற்றும் கடின மற்றும் மென் தொடர்புகள் குறித்து கவனம் செலுத்தும் செயற்பாட்டு திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொதுநலவாய செயலகத்திற்கான கட்டளை ஆகியவற்றை உள்ளடக்கிய வர்த்தக மற்றும் முதலீட்டுக்கான பொதுநலவாய இணைப்பு நிரல் குறித்த பிரகடனத்தை அரச தலைவர்கள் ஏற்று பின்பற்றியிருந்தனர்.

"நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ளுதல்(SDG): வர்த்தகம், சமூகம் மற்றும் அரசாங்கங்களை அணிசேர்த்தல்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தகப் பேரவையில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன அவர்கள், சமூக பொறுப்பினை பிரதிபலிக்கக்கூடியதும், சட்ட ஆட்சியை நிலைநாட்டக்கூடியதும் அமைதி மற்றும் நல்லாட்சிக்கான வினையூக்கியாக சிறந்த வர்த்தக நடைமுறைகளை வலியுறுத்தியிருந்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் சந்திப்புகளுக்கு இணையாக நடைபெற்ற தொடர்பான நிகழ்வுகள் மற்றும் பேரவைகளில் இலங்கை சார்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஸாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கை பங்குபற்றிய பொதுநலவாய வர்த்தகப் பேரவையில் இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான களமாக பொதுநலவாயத்தை பயன்படுத்திக் கொண்ட 40 சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். தகவல் தொழில்நுட்ப- வர்த்தக செயல்பாட்டு ஒப்பந்த துறையில் (IT-BPO) ஆக்கத்திறன் மற்றும் திறன்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் 'ஆக்கத்திறனுள்ள தீவு" எனும் வர்த்தகநாமம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமையானது இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்திருந்தது. இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பொதுநலவாய சிறிய நாடுகளின் வர்த்தக நிதி வசதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுடன், சிறிய நாடுகளின் வர்த்தக நிதி வசதி ஐ அமைப்பதற்காக இந்தியா, மொரீசியர்ஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இணைந்து கொண்டிருந்தது.

அடுத்த பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு ருவாண்டா நாட்டினால் 2020 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ளது.

CHOGM அறிவுப்புகள் மற்றும் பின்பற்றப்பட்ட ஏனைய அனைத்து ஆவணங்களையும் http://thecommonwealth.org/newsroom  வலைத்தளம் ஊடாக அணுக முடியும்.

 

 

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2018 ஏப்ரல் 25

 

 

CHOGM-1

CHOGM3

CHOGM4

CHOGM5

 

CW Digital Health Centre

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close