
"ஊழலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நேர்மை மற்றும் நெறிமுறைசார் நடத்தையின் பொருத்தப்பாடு" குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவால் அக்டோபர் 23 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் வளாகத்தில் நடத்தப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவுறுத்தலின் பேரில், இந்நிகழ்ச்சித்திட்டத்தை அமைச்சின் உள்ளக விவகாரப் பிரிவு மற்றும் இலங்கை வெளிநாட்டுச் சேவை சங்கம் (SLFSA) ஏற்பாடு செய்தன. இலங்கை வெளிநாட்டு சேவையின் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொடர்புடைய உள்ளக விவகாரப் பிரிவைப் (IAU) பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான தற்போதைய சட்ட கட்டமைப்பு, அரசு ஊழியர்கள் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பின் கீழ் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் செழுமையான இலங்கையை கட்டியெழுப்புவதில் அரச ஊழியர்களின் பொறுப்பு மற்றும் பங்கு குறித்த அறிவூட்டலை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025, அக்டோபர் 27





