இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)

இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 09.04.2021 ஆம் திகதிய வர்த்தமானி, இல: 2/223 இல் பிரசுரிக்கப்பட்ட, இலங்கை வெளிநாட்டுச் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2020 (2021)’ அறிவித்தலின் பகுதி ꠰: பிரிவு (꠰꠰) விளம்பரப்படுத்தல்” இலுள்ள பின்வரும் திருத்தங்களை அரசாங்க சேவை ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது என்பதை வெளிநாட்டமைச்சு அறிவிக்க விரும்புகிறது.

திருத்தம்

மேற்படி அறிவித்தலின் பிரிவு 8 (꠰꠰꠰) இல் குறிப்பிட்ட மேற்குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி, 04.06.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவித்தலின் பிரிவு 04 இல் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச வயதெல்லையானது, மூல வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டவாறு, விண்ணப்பங்களுக்கான முடிவுத் திகதியாக முன்னர்  (.ம்: 10.05.2021) இருந்தவாறே அமையும்.

 இந்த இறுதித் திகதி நீடிப்பு பற்றிய வர்த்தமானி அறிவிப்பினை http://documents.gov.lk/files/gz/2021/5/2021-05-21(I-IIA)T.pdf   இல் காணலாம். (இணைய இணைப்பு)

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021  மே 21

Please follow and like us:

Close