இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து உறவுகளை விரிவுபடுத்துவதற்கான இணக்கம்

இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து உறவுகளை விரிவுபடுத்துவதற்கான இணக்கம்

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான  4வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகள் 2024, ஏப்ரல் 5 ஆம் திகதி, கொழும்பில், சுவிஸ் பெடரல் வெளிநாட்டு அலுவல்கள் துறை திணைக்களத்தின் (FDFA) ஆசியா பசிபிக் தூதுவர் ஹென்ரிச் ஷெல்லென்பெர்க் மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர்/ இருதரப்பு (மேற்கு) யசோஜா குணசேகர ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பிரதிநிதிகள் கலந்தாலோசித்தனர். இலங்கை ஏற்றுமதிக்கான மேலதிக சந்தைகளை அடையாளம் காண்பதில், ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு (EDB) சுவிஸ் அரசினால் வழங்கப்பட்ட உதவியை இலங்கை பாராட்டியதுடன், ஆடையுற்பத்தியிலும் ஒத்துழைப்பை முன்மொழிந்தது. இரு நாடுகளும் பன்முகப்படுத்தப்பட்ட வர்த்தக உறவுகள் மற்றும்  சுற்றுலாத் துறையில் நிலவும் மேலதிக சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் அதுசார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஒப்புக்கொண்டன.

தொழிலாளர் இடம்பெயர் பகுதிகளில் நீண்டகால சுவிஸ் ஆதரவை இலங்கை பாராட்டியது. பாதுகாப்பான தொழிலாளர் இடம்பெயர்வை உறுதி செய்வதில் இவ்வொத்துழைப்பின் நேர்மறையான தாக்கத்தை  இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்துருவாக்கங்கள் , குறிப்பாக கூட்டு ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொடர்புகளுக்கான ஆராய்ச்சி போன்றவற்றில் இணைந்து செயற்படுவது குறித்தும் இக்கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த கொள்திறன் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் உரையாடல்கள் இடம்பெற்றன.

இவ்வரசியல் பேச்சுவார்த்தைகளின்  5 ஆவது அமர்வானது, 2026 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட வெளிவிவகார அலுவலக ஆலோசனைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் நடைபெற்றன.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஏப்ரல் 05

..............................................

මාධ්‍ය නිවේදනය

ශ්‍රී ලංකාව සහ ස්විට්සර්ලන්තය දෙරට අතර සබඳතා පුළුල් කිරීමට කැප වෙයි.

ස්විට්සර්ලන්ත විදේශ කටයුතු ෆෙඩරල් දෙපාර්තමේන්තුවේ ආසියා පැසිෆික් කලාපීය ප්‍රධානී තානාපති හෙන්රිච් ෂෙලන්බර්ග් මහතා සහ ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍යාංශයේ අතිරේක ලේකම්/ ද්විපාර්ශ්වික කටයුතු (බටහිර) යසෝජා ගුණසේකර මහත්මියගේ සම සභාපතිත්වයෙන් යුතුව ශ්‍රී ලංකාව සහ ස්විට්සර්ලන්තය අතර ද්විපාර්ශ්වික උපදේශනයන්හි සිව්වන වටය 2024 අප්‍රේල් 5 වැනි දින කොළඹදී පැවැත්විණි.

එහිදී ආර්ථික සබඳතා තවදුරටත් වර්ධනය කර ගැනීමේ හැකියාව පිළිබඳව නියෝජිත පිරිස සාකච්ඡා කළහ. ශ්‍රී ලංකාවේ අපනයන සඳහා තවදුරටත් හැකියාව පවතින වෙළෙඳපල හඳුනා ගැනීම සඳහා අපනයන සංවර්ධන මණ්ඩලයට ස්විට්සර්ලන්තය ලබා දුන් සහාය ශ්‍රී ලංකාව අගය කළ අතර රෙදිපිළි කර්මාන්තය තුළ ඇති කරගත හැකි සහයෝගීතාව සම්බන්ධයෙන් යෝජනා කළේය. වෙළඳ සබඳතා විවිධාංගීකරණය කිරීමට සහ සංචාරක ක්ෂේත්‍රයේ ඉදිරි විභවයන් සම්බන්ධයෙන් කටයුතු කිරීමටත් ඒ සම්බන්ධයෙන් සොයා බැලීමටත් දෙරට එකඟ විය.

ශ්‍රම සංක්‍රමණ ක්ෂේත්‍රයට ස්විට්සර්ලන්තය විසින් ලබා දුන් දිගුකාලීන සහයෝගය ශ්‍රී ලංකාව අගය කළේය. ආරක්ෂිත ශ්‍රම සංක්‍රමණය සහතික කිරීම සඳහා මෙම සහයෝගීතාවේ ධනාත්මක බලපෑම දෙපාර්ශවයම විසින් පිළිගන්නා ලදී.

අධ්‍යාපනය, පර්යේෂණ සහ නවෝත්පාදන පිළිබඳ සහයෝගිතාව, විශේෂයෙන් ඒකාබද්ධ පර්යේෂණ සහ විශ්වවිද්‍යාල අතර සම්බන්ධතාව සඳහා ක්‍රම ගවේෂණය කිරීම ද මෙම රැස්වීමේදී සලකා බලන ලදී. පරිසරය, දේශගුණික විපර්යාස සහ තිරසාරභාවය සම්බන්ධයෙන් සහයෝගයෙන් කටයුතු කිරීමට ඇති අවස්ථා පිළිබඳවද සාකච්ඡා කෙරිණි.‍

2026 වසරේ ස්විට්සර්ලන්තයේ බර්න් නුවර දේශපාලන උපදේශනවල පස්වන සැසිවාරය පැවැත්වීමට එකඟතාව පළ විය. 2016 දී අත්සන් කරන ලද විදේශ කාර්යාල උපදේශන පිළිබඳ අවබෝධතා ගිවිසුමට අනුව ශ්‍රී ලංකාව සහ ස්විට්සර්ලන්තය අතර ද්විපාර්ශ්වික දේශපාලන උපදේශන පැවැත්විණි.

විදේශ කටයුතු අමාත්‍යාංශය

කොළඹ

 2024 අප්‍රේල් 05 වැනි දින

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close