இலங்கை மற்றும் சீனாவின் 12வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் ஆரம்பம்

இலங்கை மற்றும் சீனாவின் 12வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் ஆரம்பம்

இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தனவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான 12வது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணைத் தலைமை தாங்குவதற்காக, சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங், இலங்கைக்கான வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவை 2023 மே 29 முதல் ஜூன் 01 வரை வழிநடத்துவார்.

இரு நாடுகளும் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலையை மதிப்பிடுவதற்கும், கருப்பொருள் ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை மதிப்பிடுவதற்கும் இந்தக் கலந்துரையாடல்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, சீன வெளிவிவகார பிரதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளார். இலங்கை – சீனா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடவுள்ள தூதுக்குழுவானது, தெவனகலவில் உள்ள இலங்கை - சீனா நட்புறவுக் கிராமத்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 மே 29

Please follow and like us:

Close