இலங்கை மற்றும் சாய்ன்ட் லூசியா ஆகியவற்றுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்

இலங்கை மற்றும் சாய்ன்ட் லூசியா ஆகியவற்றுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்

Photo 2

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான மேன்மை தங்கிய கலாநிதி அம்ரித் ரொஹான் பெரேரா மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான சாய்ன்ட் லூசியாவின் வதிவிடப் பிரதிநிதியும் தூதுவருமான மேன்மை தங்கிய திரு. கொஸ்மொஸ் ரிசாட்ஸன் ஆகியோர் நிவ் யோர்க்கில் 25 ஜூன் 2019 அன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதினைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கமும் சாய்ன்ட் லூசியா அரசாங்கமும் 25 ஜூன் 2019 முதல் இரண்டு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதற்கு தீர்மானித்தன.

இலங்கை மற்றும் சாய்ன்ட் லூசியாவுக்கிடையிலான இராஜதந்திர தொடர்பை ஸ்தாபிப்பதானது இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நன்மைக்காக அரசியல், சமூக பொருளாதார மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் தற்போது காணப்படுகின்ற நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றை மேம்படுத்தும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
28 ஜூன் 2019

Photo 1 Photo 3

Please follow and like us:

Close