இலங்கை மற்றும் குவைட் நாடுகள் எதிர்கால ஒத்துழைப்பு தொர்பாக கலந்தாலோசிக்கின்றன:
குவைட் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் உதவியாளர் அலி சுலைமான் அல் ஸஈத் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன அவர்களை 24 ஜூலை அன்று சந்தித்தார்.
குவைட் தூதுக்குழுவானது மேலதிக செயலாளர் (இருதரப்பு நடவடிக்கைகள்) சுமித் நாகந்தல, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் குவைட் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டது. இக் கலந்துரையாடலானது இருமுறை வரிவிதிப்பை தவிர்த்தல் மற்றும் கலாசார, ஊடக, கல்வி, விஞ்ஞான, தொழிநுட்ப ஒத்துழைப்பு, முதலீடு தொடர்பான ஊக்குவிப்பு மற்றும் முதலீடுகளுக்கான பரஸ்பர பாதுகாப்பு, தொழிலாளர்களை வேலைக்கமர்த்துதல் மனிதவள அபிவிருத்தி தொடர்பான இருதரப்பு உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதல் போன்ற அம்சங்களை உட்பொதிந்திருந்தது. அதேபோன்று, இலங்கையில் அரபு பொருளாதார அபிவிருத்தி, எதிர்கால குவைட் முதலீடு மற்றும் குவைட் நிதியினூடாக இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவிகளை வழங்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மொரகஹகந்த வடிகாலமைப்பு மற்றும் விவசாய அபிவிருத்தி திட்டம், மொரகொல்ல நீர்வலுத் திட்டம் உள்ளடங்களாக 15 திட்டங்களுக்கு இதுவரை சுமார் 77 மில்லியன் குவைட் தீனார்களை விடவும் (256 மில்லியன் அமெரிக்க டொலர்) அதிகமான தொகை கடனாக வழங்கப்பட்டுள்ளது.
2018 யூலை 24