'இலங்கை - தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணிகளுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் இடம்': தேசிய சுதந்திரப் பயண  முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சி 2021 இல் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

‘இலங்கை – தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணிகளுக்கான மன அழுத்தத்தைக் குறைக்கும் இடம்’: தேசிய சுதந்திரப் பயண  முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சி 2021 இல் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு

2021 டிசம்பர் 04 முதல் 05 வரை நடைபெறும் தேசிய சுதந்திரப் பயண முகவர் சங்கங்களின் பயணக் கண்காட்சியின் 2021 பதிப்பில்,  மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் நிகழ்வுப் பங்காளியாக அழைக்கப்பட்டது. இந்த ஆண்டு நிகழ்ச்சி ஒரு கலப்பினப் பதிப்பில் மெய்நிகர் வலையமைப்பு அமர்வாக ரொபின்சன் நாகா, பிகோல், பிலிப்பைன்ஸில் பௌதீக ரீதியாக நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து, தூதரகம் பிலிப்பைன்ஸ் பயண முகவர்கள் மற்றும் பயணிகளுக்கு  சுற்றுலா ஊக்குவிப்பு வீடியோக்கள் மற்றும் சுற்றுலாப் பிரசுரங்கள் மூலம் இலங்கையை தொற்றுநோய்க்குப் பிந்தைய பயண இடமாகக் காட்சிப்படுத்தியது. இதற்கிடையில், ஐந்து இலங்கை பயண முகவர்கள் 2021 டிசம்பர் 04ஆந் திகதி வலையமைப்பு அமர்வுகளில் பங்கேற்றனர்.

தூதர் ஷோபினி குணசேகர தனது கருத்துக்களில், உலகளாவிய சுகாதார சூழ்நிலையில் நிலவும் சவால்களுக்கு மத்தியில் சுற்றுலாத்துறை மீட்சியை நோக்கிச் செல்கின்றது என்ற நம்பிக்கையின் அடையாளமாக இந்தச் செயற்பாட்டை ஒழுங்கமைத்தமைக்காக தேசிய  சுதந்திரப் பயண முகவரமைப்புக்களின் சங்கத்தைப் பாராட்டினார். #HelloAgain என்ற ஹேஷ்டெக்கின் மூலம் இலங்கை இப்போது சுற்றுலாவிற்கு திறக்கப்பட்டுள்ளது என்பதை அவர் தனது விளக்கக்காட்சியில் எடுத்துரைத்தார். தொற்றுநோயின் அடிப்படையில் இலங்கையின் தற்போதைய சாதகமான சூழ்நிலையையும், குறிப்பாக அதன் மக்கள்தொகையின் 70% ஆனோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அழகிய கடற்கரைகள், செழிப்பான மலைகள், கம்பீரமான கலாச்சாரத் தலங்கள், களிப்பூட்டும் சாகசங்கள், ஆயுர்வேத ஸ்பாக்கள்  மற்றும் சிகிச்சைகள், ஷொப்பிங் மற்றும் ஆடம்பர நடவடிக்கைகள் போன்ற சமகால சலுகைகளுடன் கூடிய பல்வேறு இடங்களின் மூலம் நாட்டின் கச்சிதமான, உண்மையான மற்றும் ஆற்றல்மிக்க விற்பனைப் புள்ளிகளையும் அவர் குறிப்பிட்டார். மேலும், குறிப்பாக வயது வந்தோர், சுதந்திரமான பயணிகள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் டிஜிட்டல் நாடோடிகள் போன்ற தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணிகளின் நலன்கள் மற்றும் தேவைகளுக்கு நாடு முழுமையாகப் பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர பயண முகவர்களின் தேசிய சங்கம் பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய சுற்றுலா சங்கங்களில் ஒன்றாகும். பழக்கப்படுத்துதல்  சுற்றுப்பயணத்திற்காக, அவர்களது பொது உறுப்பினர் மற்றும் வணிகக் கூட்டத்தை நடாத்தும் முகமாக, 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த சங்கம் இலங்கைக்கு விஜயம் செய்வதற்குத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சுற்றுலா நிகழ்ச்சி என்பது சுதந்திர பயண முகவர்களின் தேசிய சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்தப் பயண நிகழ்ச்சியாகும். இதில் பொது மற்றும் தனியார் துறைப் பங்குதாரர்கள், தேசிய சுதந்திரப் பயண முகவர் உறுப்பினர்கள், பயண முகவர் மற்றும்  ஆர்வமுள்ள பிலிப்பைன்ஸ் பயணிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2021 டிசம்பர் 14

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close