இலங்கை ஆயுதப்படைக்கு 300,000 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை சீனா அன்பளிப்பு: மொத்தமாக இலங்கைக்கு 3 மில்லியன் தடுப்பூசிகள்

இலங்கை ஆயுதப்படைக்கு 300,000 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளை சீனா அன்பளிப்பு: மொத்தமாக இலங்கைக்கு 3 மில்லியன் தடுப்பூசிகள்

சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு 300,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை ஆயுதப் படைகளுக்கு அனபளிப்பாக வழங்கவுள்ளது. தடுப்பூசிகளின் விமானப் போக்குவரத்துக்காக இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைக்கின்றது.   எமது ஆயுதப்படைகள் சுகாதார சேவைகளுடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருவதனால், இலங்கைக்கு இந்த அன்பளிப்பு அதிக முக்கியத்துவம் வாயந்ததாக அமைவதாக சீனாவின்  ஜனாதிபதியும் மத்திய இராணுவ ஆணைக்குழுவும் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

சீனா முன்னர் 2.7 மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது.  தற்போதைய 300,000 டோஸ் அன்பளிப்பில், சீனா வழங்கிய மொத்த அளவு 3 மில்லியனாக இருக்கும். தொற்றுநோய் ஏற்பட்டதில் இருந்து சீனாவும் இலங்கையும் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் உதவிகளை வழங்கியுள்ளதுடன், இந்த அன்பளிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறித்து நிற்கின்றது.

கோவிட்-19 இன் சவாலை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவிய சீன அரசாங்கத்திற்;கு தனது நன்றிகளை தூதுவர்  கலாநிதி. பாலித்த கொஹொன தெரிவித்தார். இலங்கைக்கு உதவிகள் தேவைப்படும் போதெல்லாம் இலங்கை மக்களுக்கு உதவ சீனா ஒருபோதும் தயங்கியதில்லை என கலாநிதி. கொஹொன மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்

பெய்ஜிங்

2021 ஆகஸ்ட் 27

Please follow and like us:

Close