இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொரொண்டோவில் வைபவம்

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொரொண்டோவில் வைபவம்

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொரொண்டோவில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2022 பெப்ரவரி 04ஆம் திகதி டொரண்டோவில் உள்ள தூதரக வளாகத்தில் ஊழியர்களின் பங்கேற்புடன் ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்தது.

இலங்கை மற்றும் கனடா நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தாய்நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை மீண்டும் ஒலிக்கப்பட்டதுடன், கௌரவ வெளிநாட்டு அமைச்சர் மற்றும் மாண்புமிகு பிரதமர் ஆகியோரின் செய்திகள் வாசிக்கப்பட்டன.

இலங்கையின் துணைத் தூதரகம்,

டொராண்டோ

2022 பிப்ரவரி 09

Please follow and like us:

Close