இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் கனடாவின் நெறிமுறைத் தலைவருடன் சந்திப்பு

இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் கனடாவின் நெறிமுறைத் தலைவருடன் சந்திப்பு

கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள ஹர்ஷ குமார நவரத்ன , 2021 அக்டோபர் 14 ஆம் திகதி அன்று கனடாவுக்கு வந்ததன் பிற்பாடு 2021 அக்டோபர் 15 ஆம் திகதி அன்று ஒட்டாவாவில் கனடாவின் நெறிமுறைத் தலைவர் ஸ்டீவர்ட் வீலரை சந்தித்தார்.

கனடாவின் நெறிமுறைத் தலைவரால் அன்புடன் வரவேற்கப்பட்ட  இலங்கையின் உயர்ஸ்தானிகர் ,பரஸ்பர முக்கியத்துவம் மற்றும் நலன்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

இந்த சந்திப்பின்போது, அண்மையில் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை  அதிமேதகு ஜனாதிபதி  கோட்டபாய  இராஜபக்ஷ அவர்கள்ஆற்றிய உரையை குறிப்பிட்ட நவரத்ன, இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் வகையில் சர்வதேச சமூகம் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும்  அனைத்து இலங்கையர்களையும் கைகோர்க்குமாறு அழைப்பு விடுத்தார். மேலும் திரு .நவரத்ன ,இலங்கை புலம்பெயர் நாடுகளின்  உறுப்பினர்களுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதி இராஜபக்ஷ விசேடமாக அழைப்பு விடுத்ததாகவும், இந்த முயற்சிக்கு தாம் தலைமை தாங்கப் போவதாகவும்  தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக , நெறிமுறைத் தலைவர் பன்முக கலாச்சாரத்தின் செழுமை மற்றும் கனடாவை தங்கள் வசிப்பிடமாக கொண்ட  உலகெங்குமுள்ள மக்கள் கனடாவுக்கு அளித்த பங்களிப்பு பற்றி பேசினார். கனடாவில் உள்ள தூதரகத் தலைவர்களுக்கான நெறிமுறை அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய விவரங்களையும் அவர் பகிர்ந்து கொண்டதுடன், மேலும் திரு. நவரத்னவை அவர்களுடன் சேருமாறும் அழைப்பு விடுத்தார்.

உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட இந்த வாய்ப்பிற்காக நெறிமுறைத் தலைவருக்கு நன்றி தெரிவித்ததுடன், மேலும் கனடாவில் அவரது பதவிக்காலத்தின் போது  இரு நாடுகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட நட்புறவுகளை மேலும் மேம்படுத்த  அவர் எதிர்பார்த்ததாக கூறி  தனது உரையை முடித்தார்.

 

இலங்கை உயர்ஸ்தானிகரகம்

ஒட்டாவா

18 ஒக்டோபர் 2021

Please follow and like us:

Close