இலங்கையின் பாதுகாப்புப் பிரதிநிதிகள் ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கேர்னல்  ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமினுடன் சந்திப்பு

இலங்கையின் பாதுகாப்புப் பிரதிநிதிகள் ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கேர்னல்  ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமினுடன் சந்திப்பு

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமால் குணரத்ன அவர்களின் தலைமையில் சர்வதேச பாதுகாப்பு - தொழில்நுட்ப மன்றம் இராணுவம் - 2021 மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டுகள் - 2021 ஆகியவற்றிற்காக ரஷ்யாவிற்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தூதுக்குழு, ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கேர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் ஃபோமினை மொஸ்கோவில் உள்ள சர்வதேச  இராணுவ ஒத்துழைப்புக்கான பிரதான பணியகத்தில் வைத்து சந்தித்தது.

இராணுவம் மற்றும் இராணுவ - தொழில்நுட்பத் துறைகளில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம், இராணுவப் பயிற்சி, சர்வதேச இராணுவப் பயிற்சிகளிலான பங்கேற்பு மற்றும் அனுபவம்,  மற்றும் ரஷ்ய மற்றும் இலங்கை பாதுகாப்பு கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் நெருக்கமான உறவுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றிலான இரு நாடுகளுக்குமிடையிலான பரிமாற்றம் ஆகிய விடயங்களில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளினதும் மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் இடையிலான நீண்டகால நட்பு குறித்து குறிப்பிட்ட  பாதுகாப்புச் செயலாளர், வரலாற்றில் கடினமான காலங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுகளுக்காக ரஷ்யாவிற்கு பாராட்டுக்களைத் தெரிவித்த அதே வேளையில், மன்றம் இராணுவம் -2021 மற்றும் சர்வதேச இராணுவ விளையாட்டுகள் - 2021 ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக தனக்கும், தனது பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தமைக்காக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிற்கு நன்றிகளைத் தெரிவித்தார். மன்றத்தின் உயர் தரங்கள், ரஷ்ய ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களின் கண்காட்சி மற்றும் விளையாட்டுகளிலான நட்பு சூழ்நிலையை அவர் ஒப்புக்கொண்டார். அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அவர் உறுதியளித்தார்.

நட்பு ரீதியானதாக நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு நாடுகளின் இராணுவத்தினருக்கும் இடையிலான நட்பை  வலுப்படுத்தியது. இறுதியாக, இரு தரப்பினரும் பாரம்பரிய நினைவுச் சின்னம் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்

மொஸ்கோ

2021 ஆகஸ்ட் 31

Please follow and like us:

Close