இலங்கையின் தேசிய அபிவிருத்தியில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு நிலையான அம்சமாகும்.

இலங்கையின் தேசிய அபிவிருத்தியில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒரு நிலையான அம்சமாகும்.

D0k8QqGX0AEbIU8

 

"சுற்றுச்சூழலை பாதுகாப்பததிலும் வளர்ப்பதிலும் இலங்கை நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான நிலையான தேசிய அபிவிருத்திக்கான ஒரு உறுதியான அம்சத்தை உருவாக்கும் கொள்கைகளையும் திட்டங்களையும் மேற்கொண்டுள்ளது" என  ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, தூதுவர்  ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் கூறினார்.

ஜெனீவாவில் 2019 ம் ஆண்டு 'மக்கள் மற்றும் உலகின், நீருக்கு கீழ் வாழும் உயிரினங்களின் பாதுகாப்பு 'என்ற தலைப்பின் கீழ்  இடம்பெற்ற  உலக வனவிலங்கு விழா கொண்டாட்டத்தில்(World Wildlife Day)  உரையாற்றிய தூதுவர் அஸீஸ், "இந்த சந்தர்ப்பத்தில், கொழும்பில் 23 மே  முதல் ஜூன் 3 வரை நடைபெறவுள்ள  வன  விலங்குகள் மற்றும் தாவரங்களின்(CITES) அழிந்து வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கை அங்கத்துவ நாடுகளின் மாநாட்டின் 18 வது கூட்டத்தினை  நடத்தவுள்ளது  இலங்கைக்கு  பெருமை தருகிறது" என்று கூறினார்.

"மாநாட்டில் கிடைக்கப்பெற்ற அதிகப்படியான ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய  பரிந்துரைகளில் நாம் திருப்தியடைகிறோம், இது இன்றுவரை CITES இன் வரலாற்றில் நடைபெற்ற மாநாடுகளில் மிகப்பெரியதாக அமையவுள்ளது. மாகோ சுறா(Mako Shark), ஆப்பு மீன்(Wedgefish) மற்றும் கித்தார் மீன்(Guitarfish) ஆகியவற்றை பாதுகாப்பத்திற்கான பரிந்துரைகள்  சுவாரஸ்யமாக உள்ளன. வரவிருக்கும் மாநாட்டில் இந்த 3 திட்டங்களுக்கும் இலங்கை இணை-அனுசரணை அளிப்பது  பெருமையளிப்பதாகவும் இந்த மாநாடு ஒரு கார்பன் உணர்திறன்(Sensitivity) முறையில் நடத்தப்படும்" என்றும் அவர் கூறினார்.

இலங்கையானது  ஒரு தீவு  என்ற வகையில் நிலம்  மற்றும் நீருக்கு கீழான இருவகை செழிப்பான பல்லுயிர்களுடன்  கூடிய நாடாகும். அங்கு ள்ள மக்கள் தொகையின் கணிசமான பகுதியின் வாழ்வாதாரங்கள் கடல், நதிகள் மற்றும் உள்நாட்டு நீர்த்தேக்கங்களுக்கிடையில் உள்ளடக்கப்பட்ட்டிருக்கின்றன. 'நீருக்கு கீழே வாழ்வதற்கான சவால்கள் உண்மையில் நம் உலகத்துக்கும் அதன் மக்களுக்கும் சவாலாக இருந்தன' என்ற கருத்தை இலங்கை முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என்று தூதுவர் அஸீஸ் குறிப்பிட்டார்.

உலகளாவிய கண்ணோட்டத்திற்கு அமைய, பல்வேறு சர்வதேச கருவிகளின் உதவியுடன் நீருக்கடியிலான வாழ்க்கையை பாதுகாக்கும்  உறுதிப்பாட்டில் இலங்கை நிலையாக  உள்ளது.  கடல் சுத்தம் தொடர்பான செயலாற்றுகை, சர்வதேச பவள பாறைகள்  முன்முயற்சி, பொதுநலவாய சுத்தமான சமுத்திரங்கள் கூட்டமைப்பு, கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நீர் சார் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும்,  மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும்  பிரான்ஸ் உடன் செய்யப்பட்ட பிரகடனம்  என்பன இலங்கை பங்குதாரராகவிருக்கும் உலகளாவிய முன்முயற்சிகளில் சிலவாகும். அத்துடன், சதுப்பு நில சீரமைப்பு சம்பந்தமான பொதுநலவாய நீல சாசன செயல் குழுவில் இலங்கை முன்னுதாரணமாகவும்  திகழ்கிறது எனவும் கூறினார்.

2019 க்கான  உலக வனவிலங்கு தினக்  கொண்டாட்டம்,  ஜெனீவாவில்  CITES செயலகம், ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி பற்றிய மாநாடு(UNCTAD), ஐரோப்பாவுக்கான பொருளாதார ஆணையம்(Economic Commission for Europe), ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்புத்திட்டம் (UN  Environmental  Programme)  மற்றும் ஜெனீவா சூழல் வலையமைப்பு(Geneva  Environment Network) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அமைப்புகளிலிருந்தும், உலக வர்த்தக அமைப்பிலிருந்தும்(World Trade Organization) வந்த உறுப்பினர்கள் தொடர்ந்து வந்த கருப்பொருள்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நலன்களின் சமமான பகிர்வு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு கார்பன் உணர்திறன் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக பங்களிப்பு, மற்றும் அருகிவரும் இனங்களின் வர்த்தகத்திற்கு எதிரான வலுவான தடுப்பு நடவடிக்கைகள் என்பன மூலம் தொடர்ந்து எழும் பொருளாதார நன்மைகள் இந்த நிகழ்வில் நிகழ்வின் கலந்துரையாடல்களில் கணிசமான  பகுதியை உள்ளடக்கியிருந்தன.

 

 

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம்
ஜெனீவா
9 மார்ச் 2019

 

 

 

Please follow and like us:

Close