பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், விருது பெற்ற மல்டி பிராண்ட் மெசெய்ல் மையத்தில் அமைந்துள்ள ஜேர்மனியின் மிகப்பெரிய கடைத்தொகுதி மற்றும் ஓய்வு வளாகங்களில் ஒன்றான பிராங்பேர்ட்டில் உள்ள ரோன்ஃபெல்ட் டீ ஹவுஸில் ஒரு தனித்துவமான 'தேநீர் தியான' நிகழ்வோடு 'சிலோன் டீ' யை சந்தைப்படுத்தி, காட்சிப்படுத்தியது. பிராங்பேர்ட்டின் வணிக மையம் கிறிஸ்மஸ் கடைக்காரர்களால் நிரம்பியிருந்ததால், நிகழ்வின் நேரம் சிறப்பாக அமைந்திருந்தது. இலங்கையின் செழுமையான தேயிலைக் கலாச்சாரம், சிலோன் தேயிலையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சிலோன் தேயிலையின் பல்வேறு சுவைகள், பதப்படுத்தும் நுட்பங்கள் மற்றும் விளக்கக்காட்சி முறைகள் பற்றிய விழிப்புணர்வை பங்கேற்பாளர்கள் மத்தியில் தூதரகத்தால் ஏற்படுத்த முடிந்தது.
ஜேர்மனியில் தற்போதுள்ள தொற்றுநோய்க் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் போது, குறிப்பிட்ட ஊடக முகவர்கள், விமான அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் குழுவிற்கு சிலோன் தேநீர் வகைகள் வழங்கப்பட்டன.
விருந்தினர்கள் அனைவரும் 'தேயிலை தியானம்' மூலம் வழிநடத்தப்பட்டதுடன், அதன் போது அவர்கள் உலகிலேயே சிறந்த தேயிலையை உற்பத்தி செய்வதற்காக தேயிலை இலைகள் மிகுந்த கவனத்துடன் வளர்க்கப்படுகின்ற இலங்கையின் தேயிலைத் தோட்டங்கள் வழியாக உணர்ச்சிகரமான பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் அதனுடன் பிணைந்து, ஓய்வை அனுபவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இலங்கையின் ஏழு வௌ;வேறு பிராந்தியங்களில் இருந்து சிலோன் தேயிலையின் தனித்துவமான சுவைகள், நறுமணங்கள் மற்றும் அமைப்புக்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த ள் துணைத் தூதுவர் மதுரிகா ஜோசப் வெனிஞ்சர், இலங்கையை பரந்த தேயிலைத் தோட்டங்களுடன் கூடிய சரியான தீவு விடுமுறைத் தலமாக சந்தைப்படுத்தினார். வருகை தந்தவர்களுக்கு சிலோன் தேயிலையின் பொதிகள், சுற்றுலா நினைவுச் சின்னங்கள் மற்றும் சிறிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ரொன்ஃபெல்ட் தேயிலை இல்லத்தின் முகாமையாளர் ஜுட்டா டர்லன் அவர்களால் தேநீர் ருசிக்கப்பட்டதுடன், சிலோன் தேயிலையின் உயர் தரம் மற்றும் தேயிலையின் குறித்த தரம் எவ்வாறு இலங்கைக்கு முதன்மையான முன்னுரிமையாக அமைகின்றது என அவர் குறிப்பிட்டார். 'எமது தேயிலைக்கு சிறந்த அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை மட்டுமே நாங்கள் தெரிவு செய்வதுடன், எமது உயர் தேவைகளுக்கு ஏற்றவாறு அடிக்கடி தரப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றோம்,' என அவர் மேலும் தெரிவித்தார்.
பல முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சிறந்த ஹோட்டல்கள், கடை மோல்கள் மற்றும் தேநீர் வீடுகளுக்கு தேநீர் விநியோகம் செய்து, உலகின் முன்னணி பாரம்பரிய தேயிலை நிறுவனங்களில் ஒன்றாக ரோனெஃபெல்ட் வெற்றியின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், ரோனெஃபெல்ட் தேயிலை அகடமி எதிர்காலத் தேயிலை தொழில் வல்லுநர்களுக்கு தேயிலைத் துறையில் தொழில்சார் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களது பயிற்சித் திட்டத்தில் இலங்கையில் உள்ள பல தேயிலைத் தோட்டங்களுக்கான ஒரு பயணமும் உள்ளடங்கும்.
இலங்கையின் துணைத் தூதரகம்,
பிராங்பேர்ட் ஆம் மெயின்
2021 டிசம்பர் 10