மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 நவம்பர் 20ஆந் திகதி பிலிப்பைன்ஸின் பசே சிட்டியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச பஜார் 2022 இல் பங்கேற்றது.
புகழ்பெற்ற சிலோன் தேயிலை தரநாமங்களான டில்மா, பசிலூர் மற்றும் ஜோர்ஜ் ஸ்டூவர்ட்ஸ் ஆகியவற்றின் உள்ளூர் விநியோகஸ்தர்களுடன் இணைந்து, தூதரகம் நாட்டின் சிறந்த சிலோன் தேநீர், சுவையூட்டிப் பொருட்கள், கோப்பி மற்றும் சுற்றுலாத் தலமாக அதன் புகழ்பெற்ற இடங்களை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'இலங்கைக் கூடம்' ஒன்றை ஏற்பாடு செய்தது.
நிகழ்வின் பிரதம விருந்தினரான செனட்டர் லோரன் லெகார்டா மற்றும் வெளிநாட்டு விவகார செயலாளர் என்ரிக் மனலோவின் துணைவியார் மற்றும் சர்வதேச பஸார் அறக்கட்டளையின் தலைவி பமீலா லூயிஸ் மனாலோ ஆகியோரால் எண்ணெய் விளக்கை ஏற்றப்பட்டு, கூடம் முறைப்படி தொடங்கப்பட்டது.
செயலாளர் மனலோ உட்பட கௌரவ விருந்தினர்கள் மற்றும் இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் புதிய சிலோன் தேநீருடன் உபசரிக்கப்பட்டு இலங்கை உற்பத்தி செய்யும் கோப்பி மற்றும் சுவையூட்டி வகைகளை அறிமுகப்படுத்தினர். சுற்றுலாப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டதுடன், விளம்பர வீடியோக்கள் கூடத்தின் சுற்றுலா மூலையில் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த ஆண்டு 'உலகம் கடைக்கு வருகின்றது' என்ற கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச பஸார், பிலிப்பைன்ஸின் வெளியுறவுத் திணைக்களம், இராஜதந்திர மற்றும் தூதரகப் படைகள் மற்றும் தூதரகத் தலைவர்களின் வாழ்க்கைத் துணைகளுடன் இணைந்து ஐ.பி.எஃப். ஆல் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிகழ்வாகும். இது பிலிப்பைன்ஸ் முழுவதிலும் உள்ள அதன் பயனாளிகளுக்கான வாழ்வாதாரம் மற்றும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நிதி திரட்டும் நிகழ்வாகும்.
இலங்கைத் தூதரகம்,
மணிலா
2022 நவம்பர் 29