இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஏற்றுமதித் தரம் வாய்ந்த இலங்கையின் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் குறித்து ஜோரதானிய ஆடை இறக்குமதியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் ஜூன் 29ஆந் திகதி சான்சரி வளாகத்தில் முக்கிய ஆடை இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடலை நடாத்தியது. கலந்துரையாடலின் போது தூதுவர் ஷானிகா திஸாநாயக்க, தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்ட வடிவமைப்புகளைப் பயன்படுத்தி நெசவு செய்யும் திறமையான கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட ஆடை வரலாற்றின் ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார். இலங்கைப் பெண் கைவினைஞர்களுக்கு வலுவூட்டி அவர்கள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வழிவகுத்த இந்த ஆக்கபூர்வமான தொழிலின் உழகை;கும் தன்மை குறித்து வலியுறுத்தப்பட்டது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட நாற்பது ஆடை மாதிரிகள் கலந்து கொண்டவர்களுக்குக் காண்பிக்கப்பட்டதுடன், இதன் மூலம் அவர்கள் வௌ;வேறு அமைப்புமுறைகள், நுணுக்கமாக நெய்யப்பட்ட சின்னங்களின் வடிவங்கள், படங்கள் மற்றும் வண்ணங்களின் அதிர்வு ஆகியவற்றைக் கண்டறிந்து கொண்டனர். ஜோர்தானிய இறக்குமதியாளர்கள் தரத்தால் ஈர்க்கப்பட்டதுடன், சில ஆடைகளை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
ஐலண்ட் கிராஃப்ட், ஏர்பன் ஐலண்ட் மற்றும் களனி பெப்ரிக்ஸ் ஆகியவற்றிலிருந்து ஆடைகள் மற்றும் தயாரிப்புக்களின் சுயாதீன சேகரிப்பு பற்றிய காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. ஜோர்தான் சந்தை தற்போது துருக்கி, சீனா மற்றும் இந்தியாவிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்கின்றது.
இலங்கைத் தூதரகம்,
ஜோர்தான்
2022 ஜூலை 11