இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், 2024, ஜூன் 20 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் சந்திப்பார்கள்.
அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் வரகை தரவுள்ளனர்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூன் 19
Please follow and like us: