இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சருடன் பிரியாவிடை சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சருடன் பிரியாவிடை சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அஹ்மத் அலி அல் முவல்லா வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை இன்று (ஆகஸ்ட் 04) பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குமிடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதில் தூதுவர் அல் முவல்லா ஆற்றிய சேவைகளை அமைச்சர் குணவர்தன மிகவும் பாராட்டினார்.

இலங்கையுடனான முதலீடு, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் வலுவான உறுதிப்பாட்டை வெளிச்செல்லும் தூதுவர் வெளிப்படுத்தினார்.

செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் மத்திய கிழக்குப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமிந்த கொலொன்னே ஆகியோர் இந்தக் கலந்துரையாடலின் போது இடம்பெற்றிருந்தனர்.

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

04 ஆகஸ்ட் 2020

 

 

 

 

 

 

Please follow and like us:

Close