பெலாரஸ் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள ரஷ்யாவுக்கான தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, 2022 பிப்ரவரி 02-05 வரையான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பெலாரஸ் அதிகாரிகளுடன் பல சந்திப்புக்களை நடத்தினார்.
மின்ஸ்கில் தங்கியிருந்த தூதுவர், பெலாரஸ் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களை வழங்கி வைத்ததுடன், வெளிவிவகார அமைச்சர் மாண்பமிகு விளாடிமிர் மேக்கியுடன் உரையாடிய அதே வேளையில், ஒத்துழைப்பின் வாய்ப்புக்கள் குறித்து பெல்டா செய்தி நிறுவனத்திற்கு செவ்வியளித்தார்.
பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகேவை பிரதி வெளிவிவகார அமைச்சர் நிகோலாய் பொரிசெவிச் வரவேற்றார். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மீண்டும் செயற்படுத்துதல் ஆகியன குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், அரசாங்கங்களுக்கிடையேயான ஆணைக்குழுவின் அடுத்த அமர்வுகள் மற்றும் அரசியல் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடினர்.
பெலாரஸ் அரச மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் கல்வி கற்கின்றமையினால், பெலாரஸ் குடியரசின் சுகாதார அமைச்சர் டிமிட்ரி பினெவிச் மற்றும் மருத்துவக் கல்விக்குப் பொறுப்பான முதல் பிரதி அமைச்சர் திருமதி. எலினா க்ரோட்கோவாவை தூதுவர் சந்தித்தார்.
சந்திப்பின் போது, முதுகலைத் திட்டங்கள், மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பரிமாற்றம், விஞ்ஙான மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட மருத்துவக் கல்வித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு தரப்பினரும் கலந்தரையாடினர். மருந்துத் துறை மற்றும் சுகாதாரத் துறையில் இரு அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தை செயற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பெலாரஷிய கல்வி அமைச்சில் கூட்டமொன்றை நடாத்திய பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, பொறியியல் விஷேட, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், ஆராய்ச்சி போன்றவற்றிற்கு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் கூட்டுத் திட்டங்கள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் குறித்து கலந்துரையாடினார்.
பெலாரஸ் குடியரசின் விளையாட்டு மற்றும் சுற்றுலா பிரதி அமைச்சரை சந்தித்த தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, இரு நாடுகளினதும் உள்வரும் / வெளியேறும் சுற்றுலாவை திறம்பட மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.
மேலும், தற்போதைய சூழலில் சுற்றுலா நடத்துபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆழமாக அறிந்து கொள்வதற்காக பெலாரஸ் குடியரசின் சுற்றுலா அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவருடன் தூதுவர் கலந்துரையாடினார்.
விவசாய மற்றும் உணவு அமைச்சில் தூதுவரை முதல் துணை அமைச்சர் பிரைலோ வரவேற்றார். உற்பத்திகளின் இறக்குமதி / ஏற்றுமதிப் பட்டியலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பெருமளவில் காணப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கும் பெலாரஸுக்கும் இடையிலான தற்போதைய வர்த்தக புரள்வு அதிகரிக்கும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
பெலாரஸ் வர்த்தகம் மற்றும் தொழில்துறையில், இரு நாடுகளின் வணிக வட்டங்களுக்கிடையேயான தொடர்புகளின் முக்கிய திசைகள் பெலாரஸ் குடியரசின் வணிக பிரதிநிதிகளுக்கான வர்த்தக மற்றும் பொருளாதார ஆற்றலின் விளக்கக்காட்சிகளை அமைப்பதாகும்.
விவசாயம் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் துறையில் ஒத்துழைப்பின் பகுதிகளை ஆராய்வதற்காக தூதுவர் லியனகே மின்ஸ்க் டிரக்டர் வேர்க்ஸ்க்கு விஜயம் செய்தார்.
இலங்கைத் தூதரகம்
மாஸ்கோ
2022 பிப்ரவரி 14