இருதரப்பு ஒத்துழைப்பை துரிதப்படுத்துவதாக தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சர் பேராசிரியர் கலாநிதி அனெக் லௌத்தமதாஸ் இலங்கைத் தூதுவரிடம் உறுதியளிப்பு

இருதரப்பு ஒத்துழைப்பை துரிதப்படுத்துவதாக தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சர் பேராசிரியர் கலாநிதி அனெக் லௌத்தமதாஸ் இலங்கைத் தூதுவரிடம் உறுதியளிப்பு

தாய்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் (யுனெஸ்கெப்) நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்தா ஐ. கொலொன்ன தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சர் பேராசிரியர் கலாநிதி அனெக் லௌத்தமதாஸ் அவர்களை 2022 மார்ச் 07ஆந் திகதி தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இலங்கையுடனான நீண்டகால சிறந்த உறவுகளை நினைவுகூர்ந்த அமைச்சர் பேராசிரியர் கலாநிதி. லௌத்தமதாஸ், தூதுவர் சமிந்தா கொலொன்ன அவர்களை அன்புடன் வரவேற்றதுடன், தாய்லாந்தின் உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் கையொப்பமிடப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவாக செயற்படுத்துவதன் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதாக உறுதியளித்தார்.

முக்கியமாக மருத்துவம், பொறியியல், தொழில் பயிற்சி மற்றும் மொழிப் பயிற்சி ஆகிய துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பின் வழிகள் குறித்து இருவரும் மேலும் கலந்துரையாடினர்.

பரஸ்பரம் வசதியான நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தூதுவர் சமிந்தா கொலொன்ன விடுத்த அழைப்பை பேராசிரியர் கலாநிதி அனெக் லௌத்தமதாஸ் அன்புடன் ஏற்றுக்கொண்டார்.

நிரந்தர செயலாளர் பேராசிரியர் சிறீருர்க் சொங்சிவிளை, உயர்கல்வி, விஞ்ஞானம், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க அமைச்சின் பிரதி நிரந்தரச் செயலாளர் பேராசிரியர் பாசிட் லோர்டெராபோங்,

ராங்சிட் பல்கலைக்கழகத்தின் இராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தின் பீடாதிபதி பேராசிரியர். சோம்போங் சங்குவான்பன் மற்றும் பேங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளர் சரித ரணதுங்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் இணைந்திருந்தனர்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக், தாய்லாந்து

2022 மார்ச் 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close