வழக்கமான மேம்படுத்தும் திறன்களின் முக்கியத்துவத்தை கணக்கில் கொள்வதற்காக, தூதரகத்தின் கலாச்சார மற்றும் கல்வித் திட்டங்களின் கீழ், ஜொயெல்லா அஸிஸ் மொழிபெயர்ப்பு நிறுவனத்துடன் இணைந்து, லெபனானின் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் மொழி இராஜதந்திரம் மற்றும் சத்தியப்பிரமாணம், டிஜிட்டல் குடியுரிமை மற்றும் இராஜதந்திரத்தில் ஆடைக் குறியீடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி நடைபெற்றது. நிறுவனத்தின் சார்பில் வளவாளர்கள் ஜொயெல் அஸிஸ், கலாநிதி. டல் அயூப் ஹிட்டி மற்றும் நதாலி ரபீஹ் மௌகர்செல் ஆகியோர் பங்கேற்றனர்.
பல மொழி அமைப்பில் இராஜதந்திரத்தில் மொழிகள், மொழிபெயர்ப்பில் துல்லியத்தின் முக்கியத்துவம், டிஜிட்டல் குடியுரிமை மற்றும் இராஜதந்திரம் மற்றும் இராஜதந்திர அமைப்பில் ஆடைக் குறியீட்டின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புக்கள் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சி 2022 ஏப்ரல் 28ஆந் திகதி தூதுவர், தூதரக ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பெறுமதிமிக்க சான்றிதழ் வழங்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
பெய்ரூட், லெபனான்
2022 மே 04