அபுதாபியில் நடைபெற்ற 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துரையாடினர்.
பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான முன்முயற்சிகள் மற்றும் பிராந்திய நிறுவனங்களில் கூட்டு முயற்சிகள் ஆகியன தொடர்பில் இதன்போது குறிப்பாக கலந்துரையாடப்பட்டன.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 டிசம்பர் 06
Please follow and like us: