இந்தியாவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட  புதுடில்லியில் கடமைகளைப் பொறுப்பேற்பு

இந்தியாவுக்கான இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட  புதுடில்லியில் கடமைகளைப் பொறுப்பேற்பு

அமைச்சரவை அந்தஸ்துடன் நியமிக்கப்பட்ட இலங்கையின் நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் எளிமையான முறையில்  இன்று (30) நடைபெற்ற நிகழ்வில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் திருமதி. ஜெனிபர் மொரகொட  ஆகியோரை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் பாரம்பரிய முறையில் வெற்றிலைகளை வழங்கி வரவேற்றனர்.

அதி வணக்கத்திற்குரிய கலாநிதி. நியங்கொட விஜிதசிறி அனு நாயக்க தேரர், அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் கொள்ளுப்பிட்டியே மகிந்தசங்கரக்கித அனு நாயக்க தேரர், அதி வணக்கத்திற்குரிய திரிகுணாமலே ஆனந்த மகா நாயக்க தேரர், அதி வணக்கத்திற்குரிய பேராசிரியர் கோட்டாபிட்டியே ராகுல அனு நாயக தேரர் மற்றும் இந்திய மஹாபோதி சங்கத்தின் பொதுச் செயலாளர் அதி வணக்கத்திற்குரிய பெலவத்தை சீவலி  நாயக்க தேரர் உள்ளிட்ட மரியாதைக்குரிய மகா சங்கத்தினரால் ஸூம் வலைத்தளம் வழியாக நிகழ்த்தப்பட்ட சேத் பிரித் நிகழ்வுக்கு மத்தியில் திரு. மொரகொட தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகராலய ஊழியர்களிடம் உரையாற்றிய நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர், இலங்கையின் நலன்களை முன்னேற்றுவதற்கும், இலங்கை - இந்திய உறவுகளை புதியதொரு உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களின் குறியீட்டுக்  கட்டமைப்பொன்றை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் 'இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த நாட்டு வியூகம் 2021/2023' என்ற தனது கொள்கைக் கட்டமைப்பை ஊழியர் சந்திப்பில் உரையாற்றிய நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மொரகொட உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

நம்பிக்கை, ஒழுக்கமான நடத்தை, தியாகம் மற்றும் முழுமையான புரிதல் என முறையே சர்வதேச  உறவுகளின் நவீன சூழலில் விளக்கப்படக்கூடிய பாலி கெனனின் வியாகபஜ்ஜ சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சத்த, சீல, சாக மற்றும் பன்னா ஆகிய 'சதர சம்பத' அல்லது நான்கு சாதனைகளை இந்த கொள்கைக் கட்டமைப்பு அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த  ஆவணத்தை https://www.slhcindia.org/images/stories/N_images/PDF/ics%20english%20final300821.pdf இன் வழியாக அணுகிக் கொள்ளலாம். நியமனம் செய்யப்பட்ட உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வணிகம், அரசாங்கம், அரசியல், இராஜதந்திரம், ஊடகம் மற்றும் கல்வித்துறை ஆகிய தொழில்களில் ஈடுபாடுடையவராவார். அவர் இந்தியாவுக்கான இலங்கையின் இருபத்தி ஆறாவது உயர்ஸ்தானிகர் ஆவார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

புதுடில்லி

2021 ஆகஸ்ட் 31

 

Please follow and like us:

Close