இந்தியாவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்

இந்தியாவிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்

இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்மு அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,  2024 டிசம்பர் 15 முதல் 17 வரையில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திஸாநாயக்க இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி. திரௌபதி முர்மு அவர்களைச் சந்திப்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய இந்திய உயரதிகாரிகளுடன் இருநாடுகளினதும், பரஸ்பர நலன்கள் குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றும் மற்றும் பலப்படுத்துவதாக அமையும்.

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 2024 டிசம்பர்13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close