இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் 04 முதல் 06 வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் தங்கியிருக்கும் போது, இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார்.
இவ்விஜத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன், இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மார்ச் 28