இந்தியன் எக்ஸ்பிரஸின் 'ஐடியா எக்ஸ்சேஞ்ச்' நிகழ்ச்சியில் உயர்ஸ்தானிகர் மொரகொட பங்கேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸின் ‘ஐடியா எக்ஸ்சேஞ்ச்’ நிகழ்ச்சியில் உயர்ஸ்தானிகர் மொரகொட பங்கேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 2022 செப்டெம்பர் 01ஆந் திகதிய 'ஐடியா எக்ஸ்சேஞ்ச்' நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடாவை விருந்தாளராக ழைத்திருந்தது. இந்த நிகழ்ச்சி நொய்டாவில்  உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தியன் எக்ஸ்பிரஸின் சிரேஷ்ட தலையங்க ஊழியர்களுடன் கருத்துப் பரிமாற்றமாக நடாத்தப்படும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்புமிக்க ஆளுமையைக் கொண்டு நடாத்தப்படுகின்றது. இந் நிகழ்ச்சியின் வடிவமைப்பின்படி, தொகுப்பாளர்கள் விருந்தினரிடம் கேள்விகளை முன்வைப்பதுடன், அதற்கு ஏற்ப ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். கலந்துரையாடலின் உள்ளடக்கம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் செய்தித்தாளின் முழுப் பக்கத்திலும்  பிரசுரிக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் இந்தியன் எக்ஸ்பிரஸின் தலைமை ஆசிரியர் ராஜ் கமல் ஜா தலைமையிலான சிரேஷ்ட ஆசிரியர்கள் உயர்ஸ்தானிகர் மொரகொடவிடம் பல கேள்விகளை எழுப்பினர். இலங்கையின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், அதன் பொருளாதார நிலைமை மற்றும் இந்திய - இலங்கை உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக  கேள்விகள் அமைந்திருந்தன. இந்தக் கலந்துரையாடலை சிரேஷ்ட பத்திரிகையாளர் சுபாஜித் ரோய் நெறிப்படுத்தினார்.

1932ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மிக முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் ஒன்றாகும்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

புதுடில்லி

2022 செப்டம்பர் 02

Please follow and like us:

Close