ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான 14வது ஆசியான் பிராந்திய மன்றங்களுக்கு இடையேயான அமர்வை கொழும்பில் இலைங்கை நடாத்தியது

ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான 14வது ஆசியான் பிராந்திய மன்றங்களுக்கு இடையேயான அமர்வை கொழும்பில் இலைங்கை நடாத்தியது

ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான 14வது ஆசியான் பிராந்திய மன்றங்களுக்கு இடையேயான அமர்வு 2023 மே 16-17 வரை கொழும்பில் நடைபெற்றதுடனம, இதனை தாய்லாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து இலங்கை நடாத்தியது.

ஆசியான் பிராந்திய மன்ற அமர்வில் 17 ஆசியான் பிராந்திய மன்ற பங்கேற்பாளர் நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சுக்களின் அதிகாரிகள் நேரில் கலந்து கொண்ட அதே வேளை, 5 ஆசியான் பிராந்திய மன்ற பங்கேற்பாளர் நாடுகள் மெய்நிகர் ரீதியாக இணைய வழியில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சத்தியா ரொட்ரிகோ தலைமை தாங்கிய அதே வேளை, அணுசக்தியின் அமைதியான பயன்பாடுகள் குறித்த கலந்துரையாடல்களுக்கும் அவர் தலைமை தாங்கினார். இணைத் தலைவர்களான முதன்மை துணை உதவிச் செயலாளர் ஆன் கே. கன்வர் (ஐக்கிய அமெரிக்கா) மற்றும் துணை பணிப்பாளர் நாயகம் போல்போங்சே வாங்பேன் (தாய்லாந்து) ஆகியோர் முறையே ஆயுதப் பரவல் தடுப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு தொடர்பான கலந்துரையாடல்களுக்கு தலைமை தாங்கினர்.

அங்குரார்ப்பண அமர்வின் போது, பணிப்பாளர் நாயகம் ரொட்ரிகோ, 1975 ஆம் ஆண்டு ஆயுதக் களைவு தொடர்பான விஷேட அமர்விற்கான முதல் அழைப்புக்களை விடுத்ததில் இலங்கையின் பங்கையும், பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் நிராயுதபாணியாக்குவதில் இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பையும் குறிப்பிட்டார். இலங்கையின் அழிவற்ற அணுசக்தி சோதனைக்கான சபையின் தேசிய நிலையத்தின் பணிப்பாளர் அனுர ஜயதிலக, அழிவற்ற சோதனையின் பங்கு மற்றும் உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில்களுக்கான அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

இலங்கை 2007ஆம் ஆண்டு முதல் ஆசியான் பிராந்திய மன்றத்தில் உறுப்பினராக உள்ளது. ஆசியான் பிராந்திய மன்றமானது ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உரையாடலுக்கான முக்கியமான ஆசியான் தலைமையிலான பொறிமுறையாவதுடன், பிராந்தியத்தில் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஆலோசனைகளை வளர்ப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குகின்றது.

இலங்கைப் பிரதிநிதிகள் குழுவில், ஆசியான் பிராந்திய மன்றத்தின் எஸ்.ஓ.எம். தலைவர், இருதரப்பு (கிழக்கு) மேலதிக செயலாளர் யசோஜா குணசேகர, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவின் பணிப்பாளர் நாயகம் வருண வில்பத மற்றும் இலங்கை அணுசக்தி சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 மே 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close