வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆகியவற்றின் கூட்டு ஊடக வெளியீடு
வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாண்புமிகு தூதுவர் மகிந்த சமரசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், இலங்கை மக்களுக்கு 908,547 அமெரிக்க டொலர்கள் (அதாவது ரூபா. 326,077,518.30) பெறுமதியான அவசர மருந்துப் பொருட்களைத் தாராள நன்கொடையாக வழங்கியது.
இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் அமைப்பின் செலவில், இந்த முதல் மருந்துப் பொருட்கள் 2022 ஜூலை 13ஆந் திகதி விமானம் மூலம் கொழும்பை அடைந்தது. இலங்கை மக்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி உடனடியாக விநியோகிப்பதற்காக, இந்தப் பொருட்களை சுகாதார அமைச்சு பெற்றுக்கொள்ளும்.
இலங்கைக்கு சர்வதேச உதவி மற்றும் மருந்துப் பொருட்கள் இன்றியமையாததாக இருக்கும் இவ்வேளையில், இலங்கைக்கு உதவுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பிற்காக, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்திற்கு இலங்கை மக்களும் இந்தத் தூதரகமும் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கன்சாஸ், லெனெக்சாவை தலைமையிடமாகக் கொண்ட ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், ஆரோக்கியத்திற்கான அணுகலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் உலகளாவிய மனிதாபிமான அமைப்பாகும். 1992 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் மருத்துவ உதவி மற்றும் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான பொருட்களை 130 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்காவிற்குள் வழங்கியுள்ளது. இயற்கை அனர்த்தங்களின் போது மருத்துவ நிவாரணங்களை வழங்குவதன் மூலமும், தன்னார்வலர்களை அணிதிரட்டுவதன் மூலமும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பிரதிபலிக்கின்றது. 4-நட்சத்திர வழிசெலுத்தல் தொண்டு நிறுவனமான இந்த அமைப்பு, சிறந்த வணிகப் பணியகத்தின் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாவதுடன், 'பரோபகாரம் 400' இல் இடம்பெற்றுள்ளது.
மக்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் எதிர்பார்க்கின்றது. எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு மேலதிக மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக, இந்தத் தூதரகம் மற்றும் ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் ஆகியன சுகாதார அமைச்சுடன் இணைந்து தொடர்ந்தும் பணியாற்றும்.
இலங்கைத் தூதரகம், ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல்,
வொஷிங்டன், டி.சி. கன்சாஸ்
2022 ஜூலை 19