அப்துல் ஹமீட் ஷோமன் பொது நூலகத்திற்கு இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்களை இலங்கைத் தூதரகம் அன்பளிப்பு

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்டுள்ள கலாச்சார இராஜதந்திர முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட தொண்ணூற்று இரண்டு சிறுவர் புத்தகங்களின் தொகுப்பு, அம்மானில் உள்ள அப்துல் ஹமீட் ஷோமன் பொது நூலகத்தின் சிறுவர் பிரிவுக்கு பிப்ரவரி 9ஆந் திகதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பிரபல எழுத்தாளர்களான காலஞ்சென்ற சிபில் வெத்தசிங்க, குசும் திஸாநாயக்க, ஜே.பி. திஸாநாயக்க உள்ளிட்ட பலரால் எழுதப்பட்ட சிறுவர் நூல்களுக்காக நூலகத்தில் தனியான இலக்கியப் பிரிவு அமைக்கப்பட்டிருக்கும். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தூதுவர் ஷானிகா திஸாநாயக்க, இலங்கைத் தொகுப்பில் மேலும் பல புத்தகங்களை தூதரகம் சேர்ப்பிக்கும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மேலும் நூலகத்திற்கு விஜயம் தரும் ஜோர்தானிய மக்களிடம் இலங்கை பொம்மைகளை பிரபலப்படுத்துவதி மேம்படுத்துவதற்காக, டி.எஸ்.எல். லங்காவினால் தயாரிக்கப்பட்ட இயற்கை 'போனிக்கா' சேகரிப்பில் இருந்து கைவினைப் பொருட்களால் செய்யப்பட்ட இரண்டு கந்தல் பொம்மைகளை இலங்கைப் பிரிவில் வைப்பதற்காக தூதரகம் வழங்கியது.

இலங்கைத் தூதரகம்,

ஜோர்தான்

2022 பிப்ரவரி 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close