அபுதாபியிலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்த தூதரக அறிக்கை

அபுதாபியிலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்த தூதரக அறிக்கை

 

அபுதாபியிலுள்ள உணவகமொன்றில் 2020 ஆகஸ்ட் 31, திங்கட்கிழமை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்ததுடன், அதன் விளைவாக இரண்டு இலங்கையர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்தன. குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்த்து, உறுதிப்படுத்துவதற்காக இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விஜயம் செய்திருந்ததுடன், குறித்த இரு இலங்கையர்கள்களில் ஒருவர் மரணமடைந்திருந்த அதே வேளை, மற்றைய நபர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தேவையான உதவிகளை வழங்கும் முகமாக, ஐக்கிய அரபு இராச்சியத்தின் சட்ட அமுலாக்கல் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடன் அபுதாபியிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியன தொடர்புகளைப் பேணி வருகின்றன.

இலங்கைத் தூதரகம்

ஐக்கிய அரபு இராச்சியம்

03 செப்டம்பர் 2020

 

Please follow and like us:

Close