அபிவிருத்தித் திட்ட சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் நேரடி பிரெஞ்சு முதலீடுகளை இலங்கை  வரவேற்பு

அபிவிருத்தித் திட்ட சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் நேரடி பிரெஞ்சு முதலீடுகளை இலங்கை  வரவேற்பு

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் திரு. தாரக்க பாலசூரிய, முதலீட்டு சபையின் தலைவர் திரு.  சஞ்சாய மொஹோட்டால ஆகியோர் பரிஸ், பிரான்சில் 2021 அக்டோபர் 05 - 11 வரை பல உயர் மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்கா பாலசூரிய மற்றும் ஸ்ரீ லங்கன்ஸ் எயார்லைன்ஸின்  தலைவர் அஷோக் பத்திரகே ஆகியோரைக் கொண்டிருந்த முதலீட்டு சபையின் தலைவர் இணைந்திருந்த தூதுக்குழு இணைந்திருந்த இந்த இருதரப்பு சந்திப்புக்கள் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களுடன் பாரிசில் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் ஆடம்பர ஓய்வு அபிவிருத்தியில் வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடவுத்,  ஆராயவும், 2021 அக்டோபர் 05 மற்றும் 07 ஆந் திகதிகளில் இராஜாங்க அமைச்சர் மற்றும் தலைவர் ஆகியோர் பிரான்சின் முன்னணி சுற்றுலா இயக்குனரான அக்கொர் ஹோட்டல் அன்ட் கிளப் மெட்டை சந்தித்தனர்.

பிரான்சின் பன்னாட்டு விருந்தோம்பல் நிறுவனமான அக்கொர் எஸ்.ஏ. ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் மற்றும்  விடுமுறை விடுதிகளை நிர்வகிக்கின்றது. இது ஐரோப்பாவில் மிகப்பெரிய விருந்தோம்பல் நிறுவனமாகவும், உலகளாவிய ரீதியில் ஆறாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் உள்ளது. கிளப் மெட் என்பது பரிசில் தலைமையகத்தைக் கொண்டுள்ள பிரான்சின் பயண இயக்குனராவதுடன், அனைத்தையும் உள்ளடக்கிய விடுமுறைகளலும் சிறப்பாக செயற்படுகின்றன. இலங்கையுடன் தனது கதவுகள் மற்றும் எல்லைகளை மீண்டும் திறந்து, உலகளாவிய முதலீட்டாளர்களுடன் தமது அடுத்த முதலீட்டு இலக்காக இலங்கைக்குள் நுழையும் ஆர்வத்துடன், எதிர்காலத்தில் தீவு முழுவதும் வருடத்திற்கு சுமார் 30,000 க்கும் அதிகமான அறைகள் தேவைப்படும் ஒரு கோரிக்கைக்கு வலு சேர்க்க இது ஈடுபடவுள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எயார் பிரான்ஸ் ஆகிய இரண்டும் கொழும்பிற்கும் பரிசுக்கும் இடையே ஒரு  வாரத்திற்கு மூன்று விமானங்களை இயக்கும் ஒரு சுற்றுலாத் தலமாக இலங்கையை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது.

இலங்கை தூதரகம்,

பாரிஸ்

2021 அக்டோபர் 25

Please follow and like us:

Close