அனுகா 2021 இல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட  இலங்கைத் தேயிலை   

அனுகா 2021 இல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட  இலங்கைத் தேயிலை   

ஜேர்மனி மெஸ்ஸெ கொலோன் நகரல் 2021 அக்டோபர் 09 முதல் 13 வரை இடம்பெற்ற உலகின் பாரிய உணவு மற்றும் குடிபான துறையின் வர்த்தக கண்காட்சியான அனுகா 2021 இல் இலங்கை பங்கேற்றது. ஒரே கூரையின் கீழ் என்ற கருத்தம்சத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த வர்த்தக கண்காட்சியானது, தொழிற்றுறை ஆற்றுப்படுத்தல், வழங்கல் மற்றும் கேள்வியை இணைத்தல் ஆகியவற்றில் ஆழமான அறிவுகளை வழங்கி உணவு மற்றும் குடிபான துறைகளில் பலவிதமான சுவை அனுபவங்களையும் வழங்குகிறது.

இந்த வர்த்தக கண்காட்சியில் இலங்கையின் பிரசன்னமானது, நாட்டின் வர்த்தக ஊக்குவிப்பு மூலோபாயத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவிருப்பதால், எட்டு இலங்கை கம்பனிகள் “அனுகா குடிபானங்கள்” கண்காட்சியின் கீழ், திறமையான, உயர்தரமான இலங்கைத் தேயிலை உற்பத்திகளை முன்வைத்து, நவீன, புதுமை உருவாக்க மற்றும் சிறந்த உற்பத்திப்பொருள் வகைகளை காட்சிப்படுத்தி, தமது தனிப்பட்ட காட்சி அரங்கங்களுக்கு பெருந்தொகையானவர்களையும் வணிக ஆளுமைகளையும் தம் பக்கம் ஈர்த்தன.  இலங்கை தேயிலைச் சபை, இக்கண்காட்சியில் இலங்கையின் பங்கேற்பினை ஒருங்கிணைத்தது.

ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் மனோரி உன்னம்புவ மற்றும் ஃபிராங்க்ஃபேர்ட்டிலுள்ள கொன்சியுலர் நாயகம் மதுரிகா வெனிங்கர் ஆகியோர், இந்தக் கண்காட்சியின் ஆரம்ப நாளன்று இலங்கையின் காட்சியரங்கங்களுக்கு வருகைதந்து மகிழ்வித்தனர். இலங்கை கம்பனிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த தூதுவர், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் தற்போதைய சந்தைப் போக்குகள் பற்றிக் கலந்துரையாடியதுடன், தொழிற்றுறைப் பங்காளிகளுடனான நெருங்கிய ஒன்றிணைப்பு மூலமாக, இலங்கைத் தேயிலையை ஊக்குவிப்பதற்கான தூதரகத்தின் முயற்சிகள் பற்றி தொகுத்துக்கூறினார்.

நோய்ப்பரவல் ஆரம்பித்ததிலிருந்து, முதன்முதல் பார்வையாளர்களை அனுமதித்த வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றான இதில், கடுமையான சுகாதார வழிகாட்டல்களின் கீழ் உலகெங்கிலுமிருந்தும் 8000 இற்கும் அதிகமான காட்சிப்படுத்துவோர் சமுகமளித்தனர்.

இலங்கை தூதரகம்

பேர்லின்

14 அக்டோபர் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close