2வது ஐரோப்பிய ஒன்றியம் - இந்தோ பசிபிக் மன்றத்தில் பங்கேற்பதற்காக ஸ்டொக்ஹோமுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சுவீடன் நாட்டுப் பிரதமர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோமுடன் இருதரப்பு உறவுகளின் அனைத்துத் துறைகளிலும் ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கான உறுதிமொழியுடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான பல தசாப்தங்கள் பழமையான, பன்முகத்தன்மை கொண்ட, கூட்டாண்மையை நினைவுகூரிய அதே வேளை, இரு அமைச்சர்களும் 1949 இல் நிறுவப்பட்ட இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை 2024 இல் பொருத்தமான முறையில் நினைவுகூருவதறற்கு ஒப்புக்கொண்டனர்.
அமைச்சர்கள் சப்ரி மற்றும் பில்ஸ்ட்ரோம், அரசியல், பொருளாதாரம், அபிவிருத்தித் துறைகள் உட்பட நீண்டகால ஈடுபாட்டிற்கு இடையூறான அனைத்துப் பகுதிகள் குறித்தும் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கு இரு அமைச்சர்களும் வலுவான முக்கியத்துவம் அளித்ததுடன், முதலீடு, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கும் ஒப்புக்கொண்டனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைத் தொடர்ந்து, பொருளாதார மீட்சியின் பாதை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி சுவீடன் நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு விளக்கினார். இலங்கையுடனான சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தைகளின் போது, பாரிஸ் கழகத்திற்குளான சுவீடனின் ஆதரவை அவர் பாராட்டினார்.
பொருளாதார உறவுகள் குறித்த கலந்துரையாடல்கள் வர்த்தகத்தை மேம்படுத்துதல், சுவீடன் விநியோகச் சங்கிலிகளுக்கான உற்பத்தித் தளங்களைப் பல்வகைப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பத் துறையில் வணிகத் தொடர்பை மேலும் மேம்படுத்துதல், உற்பத்தி, சுற்றுலா மற்றும் குறிப்பாக இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்திற்குள் நிதி மையத்தின் தோற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முதலீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டன. சுவீடன் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கான விநியோக ஆதாரங்களை பல்வகைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் அவர் பேசினார்.
நீதித்துறை மற்றும் சட்டவாக்கச் சீர்திருத்தம், காணி விடுவிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றம், வாழ்வாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, நல்லிணக்கச் செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் இலங்கை அமைச்சர் சுவீடன் தரப்பிற்கு விளக்கினார். இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை முன்கூட்டியே கூட்டுவது குறித்தும் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்பட்டது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் முன்னேற்றம் உள்ளிட்ட சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
2வது ஐரோப்பிய ஒன்றியம் - இந்தோ பசிபிக் மன்றத்தில் அமைச்சர் சப்ரி, 'அதிக நிலையான மற்றும் உள்ளடக்கிய செழுமையை ஒன்றாகக் கட்டியெழுப்புதல்' என்ற 1வது வட்டமேசை கலந்துரையாடலை இணைந்து ஒருங்கிணைத்ததுடன், முக்கிய மன்றத்தின் பக்க அம்சமாக, பல ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளுடன் தனது இருதரப்பு ஆலோசனைகளைத் தொடருவார்.
இலங்கைத் தூதரகம்,
ஸ்டொக்ஹோம்
2023 மே 14