ஸ்வீடனின் முதன்மையான சுற்றுலா நிகழ்வான பயணச் செய்தி சந்தையில் பயண இலக்காக இலங்கை

 ஸ்வீடனின் முதன்மையான சுற்றுலா நிகழ்வான பயணச் செய்தி சந்தையில் பயண இலக்காக இலங்கை

வியாழன் (நவம்பர் 11) ஸ்டொக்ஹோம் வோட்டர்ஃப்ரொண்ட் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற ஸ்வீடனின் முதன்மையான சுற்றுலா  நிகழ்வான பயணச் செய்தி சந்தையில், இலங்கை சுற்றுலா மற்றும் ஸ்டொக்ஹோமில் உள்ள தூதரகம் ஆகியன இலங்கையை பயண இலக்காக காட்சிப்படுத்தின.

2022ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத் தலமாக இலங்கை விளங்கும் நிலையில், உலகப் பயணிகளுக்கு குறைந்தபட்சமான கட்டுப்பாடுகளுடன், குறிப்பாக முழுமையாக தடுப்பூசிகளை உட்செலுத்திக் கொண்டவர்களுக்கு, இலகுவான பயணம் மற்றும் நாட்டின் அதிசிறந்த விருந்தூம்பல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி, நாட்டின் தனித்துவமான மற்றும் மாறுபட்ட சுற்றுலா அனுபவம் 'சோ ஸ்ரீ லங்கா' கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. சிலோன் டீ மற்றும் இரத்தினங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. சுற்றுலா நிறுவனங்கள், பயண முகவர்கள்,  வலைப்பதிவாளர்கள் மற்றும் சுய தொழில்வாணர்கள் உட்பட ஊடகங்கள் மற்றும் சுற்றுலாப் பாடசாலைகள் பல இலங்கைக் கூடத்தில் கலந்துகொண்டமை இலக்கு குறித்த புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தைக் குறித்து நிற்கின்றது. பதினான்கு (14) இலங்கை சுற்றுலா நிறுவனங்கள் தமது நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பொதிகளை முன்னிறுத்துவதற்காக வருடாந்த பயணச் செய்தி சந்தையில் உள்ள கூடத்தைப் பயன்படுத்தின.

ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கிற்கான இலங்கைத் தூதுவர் திரு. தர்ஷன எம். பெரேரா, பயணச் செய்தி சந்தையின் பிரதம நிறைவேற்று  அதிகாரி திரு. நில்ஸ் நோர்பெர்க், பீ.ஏ.டி.ஏ. ஸ்வீடன் பிரிவின் தலைவர் திரு. ரொபர்ட் ஹாலின், சுவீடனின் இலங்கை வர்த்தக சபையின் பொதுச் செயலாளர் திரு. லீஃப் ஓல்சன் மற்றும் கோதன்பேர்க்கில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் திரு. மார்கஸ் பீட்டர்சன் ஆகியோரினால் சோ ஸ்ரீ லங்கா கூடம் வியாழன்று திறந்து வைக்கப்பட்டது.

ஸ்வீடன் இலங்கை வர்த்தக சபை மற்றும் அதன் செயலாளர் நாயகம் திரு. லீஃப் ஓல்சன் மற்றும் ஸ்வீடனில் உள்ள ஸ்ரீ லங்கன்  எயார்லைன்ஸ் ஜி.எஸ்.ஏ. ஆகியோரும் பயணச் செய்தி சந்தை, 2021 இல் பங்கேற்றனர்.

ஸ்கெண்டிநேவியப் பிராந்தியமானது இலங்கைக்கான சுற்றுலாத்துறைக்கான அபிவிருத்தியடைந்து வரும் முன்னுரிமைச் சந்தையாக  அடையாளம் காணப்பட்டுள்ளது. ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கில் சுற்றுலா தொடர்பான வர்த்தகக் கண்காட்சிகள் முக்கிய தொழில் நிகழ்வுகளாகும். வணிகம் முதல் வணிகம் வரையிலான வருடாந்த பயணச் செய்தி சந்தை, 2021 நவம்பர் 22, வியாழனன்று ஸ்டொக்ஹோமில் மீண்டும் கூடும்.

இலங்கைத் தூதரகம்,

ஸ்டொக்ஹோம், ஸ்வீடன்

2021 நவம்பர் 15

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close